வரலாற்றில் இன்று மே 17: 2009 யுத்தத்தில் தோல்வியை ஏற்றுக்கொள்வதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்தனர்

0 324

1620: துருக்­கியில் பிலிப்­போலிஸ் எனும் இடத்தில் நடந்த சந்­தையில் குழந்­தை­களை மகிழ்­விக்க முதன்­மு­தலில் குடை­ராட்­டினம் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டது.

1792: நியூயோர்க் பங்குச் சந்தை ஸ்தாபிக்­கப்­பட்­டது.

1861: திட்­ட­மிட்ட முத­லா­வது சுற்­றுலாப் பயணம் ஆரம்­பிக்­கப்­பட்­டது. லண்­ட­னி­லி­ருந்து பாரி­ஸுக்கு தொழி­லா­ளர்கள் குழு­வொன்றை சுற்­றுலா அழைத்துச் செல்லும் பய­ணத்­துக்கு தோமஸ் குக் ஏற்­பாடு செய்தார்.

1865: சர்­வ­தேச டெலி­கிராவ் ஒன்­றியம் ஸ்தாபிக்­கப்­பட்­டது. இது பின்னர் சர்­வ­தேச தொலைத்­தொ­டர்பு ஒன்­றி­ய­மென பெயர் மாற்­றப்­பட்­டது.

1974: அயர்­லாந்தின் டப்ளின் நகரில் இடம்­பெற்ற கார் குண்­டு­வெ­டிப்பு கார­ண­மாக 33 பேர் பலி­யா­ன­துடன் 300 இற்கும் மேற்­பட்டோர் காய­ம­டைந்­தனர்.

1940: பெல்­ஜி­யத்தின் பிரசல்ஸ் நகரை ஜேர்­ம­னிய படைகள் கைப்­பற்­றின.

1973: அமெ­ரிக்க ஜனா­தி­பதி ரிச்சர்ட் நிக்­ஸ­னுக்கு எதி­ரான வோட்டர் கேட் குற்­றச்­சாட்டு தொடர்­பாக அமெ­ரிக்க நாடா­ளு­மன்ற விசா­ரணை ஆரம்­ப­மா­கி­யது.

1980: தென்­கொ­ரி­யாவில் அர­சாங்­கத்தை தனது கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்­டு­வந்த ஜெனரல் சூன் டூ ஹ்வான், மாண­வர்­களின் கிளர்ச்­சியை கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­காக இரா­ணுவச் சட்­டத்தை பிர­க­டனம் செய்தார்

1983: லெப­னா­னி­லி­ருந்து இஸ்ரேல் வாபஸ் பெறு­வ­தற்­கான உடன்­ப­டிக்­கையில், லெபனான், இஸ்ரேல், அமெ­ரிக்கா ஆகிய நாடுகள் கையெ­ழுத்­திட்­டன.

1987: ஈரானின் எண்ணெய் கப்­பல்­களை அழிக்கும் நட­வ­டிக்­கையில் ஈடு­பட்­டி­ருந்த ஈராக் விமா­னத்­தினால், அமெ­ரிக்க யுத்தக் கப்­ப­லான யூ.எஸ்.எஸ். ஸ்டார்க் மீது குண்­டு­வீ­சப்­பட்­டதால் அக்­கப்­ப­லி­லி­ருந்த 37 அமெ­ரிக்­கர்கள் உயி­ரி­ழந்­த­துடன் 21 பேர் காய­ம­டைந்­தனர்.

1990: உலக சுகா­தார ஸ்தாப­னத்தின் பொதுச் சபை, உள­வியல் நோய்­களின் பட்­டி­ய­லி­லி­ருந்து ஒரு­பா­லின சேர்க்­கையை நீக்­கி­யது.

1992: தாய்­லாந்து பிர­தமர் சுசிந்தா கிர­பி­ரயூனுக்கு எதி­ராக பொது­மக்கள் ஆர்ப்­பாட்டம் ஆரம்­ப­மா­கி­யது. இந்த ஆர்ப்­பாட்­டத்­துக்கு எதி­ரான இரா­ணுவ நட­வ­டிக்­கை­யினால் 52 பேர் கொல்­லப்­பட்­ட­துடன் பலர் காணாமல் போயினர்.

1994: மாலாவி நாட்டில் முதல் தட­வை­யாக பல் கட்சித் தேர்தல் நடை­பெற்­றது.

1997: ஸயர் நாட்­டின்­பெயர் கொங்கோ ஜன­நா­யக குடி­ய­ரசு என மாற்­றப்­பட்­டது.

2004: ஒரு பாலின திரு­ம­ணத்தை சட்­ட பூர்வமாக்­கிய முத­லா­வது அமெ­ரிக்க மாநி­ல­மா­கி­யது மசா­சூசெட்ஸ்.

2006: அமெ­ரிக்க விமா­னந்­தாங்கி கப்­ப­லான யூ.எஸ்.எஸ். ஓரிஸ்­கனி, மெக்­ஸிகோ வளை­கு­டாவில் செயற்கை பவளப் பாறை­யாக மாற்­று­வ­தற்­காக மூழ்­க­டிக்­கப்­பட்­டது.

2007: 1953 ஆம் ஆண்­டுக்கு பின்னர் முதல் தட­வை­யாக வட கொரி­யா­வுக்கும் தென் கொரி­யாவுக்கும் இடை­யி­லான எல்­லையைக் கடந்து பரீட்­சார்த்த ரயில் பயணம் மேற்­கொள்­ளப்­பட்­டது.

2009: இலங்கை அர­சு­ட­னான யுத்­தத்தில் தமது தோல்­வியை ஒப்­புக்­கொள்­வ­தா­கவும் ஆயுதப் போராட்­டத்தை கைவி­டு­வ­தா­கவும் தமி­ழீழ விடுதலைப் புலிகள் அறிவித்தனர்.

2016: கேகாலை மாவட்டத்தில் இரு பாரிய மண்சரிவுகள் ஏற்பட்டன. அரநாயக்கவுக்கு அருகிலுள்ள சம்சரகந்தவில் ஏற்பட்ட மண்சரிவினால் 21 பேர் உயிரிழந்தனர். புளத்கொஹுபிட்டிய (வெற்றிலையூர்) அருகிலுள்ள கலுபான தோட்டத்தில் மண்சரிவினால் 14 பேர் உயிரிழந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!
logo