IS உடனும் மாகந்துரே மதூஷுடனும் தொடர்பை பேணிய சந்தேகத்தில் கோடீஸ்வரர் கைது!

0 326

                                                                                                                         (ரெ.கிறிஷ்ணகாந்)
ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு மற்றும் பாதாள உலகக்குழுத்தலைவர் மதூஷுடன் தொடர்புடையவரென கருதப்படும் வத்தளை மாபோல பிரதேசத்தைச் சேர்ந்த கோடீஸ்வர வர்த்தகர் ஒருவரை மேல் மாகாண புலனாய்வு பிரிவு மற்றும் விசேட அதிரடிப்படை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார். அதன்போது, அவரிடமிருந்து துப்பாக்கி ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

மாபோல பிரதேசத்தில் 3 மாடிகளைக் கொண்ட வீடு, அதற்கு அருகில் மற்றுமொரு சொகுசு வீடு ஆகிளனவற்றின் உரிமையாளரான இச்சந்தேகநபர், தனது இரு மனைவிகள் மற்றும் பிள்ளைகளை குறித்த வீட்டில் குடியமர்த்தியுள்ளதனையும், அவ்விரு வீடுகளின் மேல் தளங்களில் நீச்சல் தடாகங்கள் காணப்பட்டதனையும் பொலிஸ் கண்டுபிடித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!