இலஞ்சம் பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவருக்கு கடூழியச்சிறை!

0 209

                                                                                                                                        (ரெ.கிறிஷ்ணகாந்)
இலஞ்சம் குற்றச்சாட்டில் குற்றவாளிகளாக நிரூபிக்கப்பட்ட பொலிஸ் பரிசோதகர் ஒருவருக்கும், பொலிஸ் சார்ஜன்ட் ஒருவருக்கும கடூழியச் சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க உத்தரவிட்டுள்ளார்.

களுத்துறை பொலிஸ் வலயத்துக்குட்பட்ட தினியாவல பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸ் பரிசோதகர் மஹிந்த கித்சிறி மற்றும் பொலிஸ் சார்ஜன்ட் சந்தகெளும் ஜயவர்தன ஆகியோருக்கே இவ்வாறு கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2006 ஆம் ஆண்டு டிசம்பர் 11 ஆம் திகதி, அனுமதிப்பத்திரமின்றி காட்டுப்பன்றி இறைச்சியை விற்பனை செய்த நபரொருவருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்காதிருக்க, 10 ஆயிரம் ரூபாவை இலஞ்சமாகக் கோரி, அதில் 5 ஆயிரம் ரூபாவை இலஞ்சமாகப் பெற்றக் குற்றச்சாட்டில், இச்சந்தேக நபர்களுக்கு எதிராக, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழவினால் கொழும்பு மேல் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!
logo