நாட்டின் ஆட்சியை இராணுவம் பொறுப்பேற்றால் நல்லது !- அநுரகுமார திஸாநாயக்க

0 323

                                                                                                                                                  (க.கிஷாந்தன்)
உயிரத்த ஞாயிறன்று இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவம் இடம்பெற்று மூன்று வாரங்கள் கடந்துள்ள நிலையில் தற்போதும் இனவாதத்தை தூண்டும் அரசியலே நாட்டில் காணபடுவதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஹட்டன் டிக்கோயா நகரசபை மண்டபத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இன்று மக்கள் மத்தியில் சந்தேகம், வைராக்கியம் போன்றவற்றைத் தூண்டும் செயற்பாடுகள் தான் நாட்டில் தற்போதும் காணபடுகின்றன. அத்துடன் தாம் செய்கின்ற அநியாயங்கள், கொள்ளைகள் அனைத்தையும் மூடி மறைக்க முயற்சி செய்கிறார்கள்.

இந்த அரசாங்கத்தை அரசியல்வாதிகள் ஆள்வதைவிட இந்த நாட்டில் உள்ள இராணுவத்தினர் பொறுப்பேற்றால் நல்லது என நினைக்கிறேன். ஏனெனில் அப்போதுதான் இந்த நாட்டில் அனைவரும் சமாதானத்தோடு வாழ முடியும் என்றார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!