சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் மீட்கப்பட்டவை!

0 296

                                                                                                 (பாறுக் ஷிஹான்)
நீர்க்குழி ஒன்றில் காணப்பட்ட தோட்டாக்கள் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளன. சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மாளிகைக்காடு காரைதீவு எல்லைப் பகுதியில் உள்ள கைவிடப்பட்ட வீடு ஒன்றின் பின்புறமாக காணப்பட்ட குழி ஒன்றிலிருந்தே தோட்டாக்கள் -21, ரி- 56 ரக துப்பாக்கி தோட்டாக்கள் – 6 ,பொதி செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளன.
காரைதீவு கடற்படை விசேட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் நேற்று (16) தேடுதல் மேற்கொண்ட நிலையில் மேற்குறித்த பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

சம்பவ இடத்துக்கு சம்மாந்துறை பொலிஸாரும் பிரசன்னமாகி இருந்ததுடன் மீட்கப்பட்டவை விசேட அதிரடிப்படையினரால் கொண்டு செல்லப்பட்டன.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!
logo