இஸ்லாத்துக்கு மதம் மாற்றி திருமணம் செய்ய வழங்கப்பட்ட 30 இலட்சம் ரூபா!

0 964

                                                                                                                                            (எம்.எப்.எம்.பஸீர்)

தற்கொலை குண்டுத் தாக்குதல் நடாத்திய மொஹம்மட் இப்ராஹீம் இன்ஷாப் அஹமத்

கொழும்பு, சினமன் கிரான்ட் ஹோட்டலில் தற்கொலை தாக்குதல் நடத்திய மொஹம்மட் இப்ராஹீம் இன்ஷாப் அஹமட் என்பவருக்குச் சொந்தமான, தற்கொலைக்குண்டுகள் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட இடமாக சந்தேகிக்கப்படும் வெல்லம்பிட்டி செப்புத் தொழிற்சாலையில் பணி புரிந்தார் எனக் கூறப்படும் மற்றொரு சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாவனல்லையைச் சேர்ந்த மொஹம்மட் வைஸ் மொஹம்மட் சல்மான் நூர் பாரிஸ் என்ற நபரே கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று (17) கொழும்பு மேலதிக நீதிவான் பியந்த லியனகே முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டு எதிர்வரும் 30 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் ஏற்கனவே இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் இருந்துவரும் 10 ஆவது சந்தேக நபரான கருப்பையா ராஜேந்திரன் அப்துல்லாவும் இன்று நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டார். இதன்போது அவரையும் 30 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.

இந்த விவகாரத்தில் 10 ஆவது சந்தேக நபரான கருப்பையா ராஜேந்திரன் அப்துல்லாவை இஸ்லாம் மதத்துக்கு மதம் மாற்றி திருமணம் செய்து வைக்க, 30 இலட்சம் ரூபா பணம் தற்கொலைக் குண்டுதாரி இன்ஷாப்பினால் வழங்கப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரிய வந்ததாக வெல்லம்பிட்டி பொலிஸார் நீதிமன்றுக்கு அறிவித்தனர். அத்துடன் அவரிடமிருந்து 25 இலட்சம் ரூபாவுக்கான காசோலைகளும் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!
logo