சமூக வலைத்தளங்கள் ஊடாக வன்முறையை தூண்டுவோரைக் கண்காணிக்க விசேட பிரிவு!

0 475

                                                                                                       (எம்.எப்.எம்.பஸீர்)

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர

நாடளாவிய ரீதியில் தற்போது அமைதியான சூழல் நிலவுகிறது. இந்த அமைதிக்கும் சட்டம் ஒழுங்குக்கும் எவரேனும் பங்கம் ஏற்படுத்தும் வகையில் சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் குறித்து பாதுகாப்புத் தரப்பினர் விழிப்புடன் உள்ளதாகவும் அவர்கள் தொடர்பில் கடுமையான நடைமுறைகள் கையாளப்படும் எனவும் பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர கூறினார்.

வடமேல் மற்றும் கம்பஹா பகுதிகளில் நிலவிய வன்முறையுடன் கூடிய அச்ச சூழல் நிரை விலகியுள்ள நிலையிலேயே அவர் இன்று (17) இது குறித்து தேசிய பாதுகப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் இடம்பெற்ற விசடட ஊடகவியலாளர் சந்திப்பின் போது எச்சரித்தார்.

இதேவேளை, சமூக வலைத்தளங்கள் ஊடாக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுவோரை அடையாளம் கண்டு கைது செய்யும் நடவடிக்கைகளை பொலிஸ் தலைமையகத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள விசேட விசாரணைப் பிரிவினர் ஊடாக முன்னெடுப்பதாக பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டார்.
இனங்களுக்கிடையே அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் ஏதேனும் ஒரு பதிவு அல்லது அறிவித்தலை சமூக வைத்தளங்களில் பதிவு செய்பவர்கள் மற்றும் அதனை பகிர்பவர்களை முதலில் தற்போது ஸ்தாபிக்கப்பட்டுள்ள சிறப்பு விசாரணைப் பிரிவினர் கண்காணித்து அடையாளம் காண்பர்.

பின்னர் அவர்களைக் கைது செய்து மேலதிக விசாரணைகளுக்காக சி.ஐ.டி.யிடம் ஒப்படைப்பர்’ என பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர எச்சரித்தார்.

வன்முறை செயல்களை புரிய வேண்டுமென்ற உட்கருத்துகளைக் கொண்டிருத்தல் அல்லது சமய , இன, சமூக ஒற்றுமையை குலைக்கும் வகையில் காழ்ப்புணர்ச்சியை அல்லது வெறுப்பை ஏற்படுத்துதல் ஆகிய செயற்பாடுகள் 5 முதல் 20 வருட சிறைத்தண்டனைக்குரிய குற்றமாகும்.

1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்தத் தண்டனை வழங்கப்படும் என அரசாங்கத் தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் நாலக்க கலுவெவவின் கையெழுத்துடன் விடுக்கப்பட்டுள்ள விசேட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!
logo