கடலில் வீழ்ந்த தொலைபேசியை கௌவிக்கொண்டு வந்து யுவதியிடம் ஒப்படைத்த வெள்ளைத் திமிங்கிலம் (வீடியோ)

0 602

யுவதியொருவர் கடலில் தவறவிட்ட கைத்தொலைபேசி, வெள்ளைத் திமிங்கிலம் ஒன்றின் மூலம் மீளக் கிடைத்த சம்பவம் நோர்வேயில் இடம்பெற்றதாக செய்தி வெளியாகியுள்ளது.

நேர்ரவேயின் ஹம்மர்பெஸ்ட் கரையோரத்தில் அரிய வகை இனத்தைச் சேர்ந்த வெள்ளைத் திமிங்கிலமொன்று நீந்தித் திரிவதை சில வாரங்களுக்கு முன் உள்ளூர் மீனவர்கள் அவதானித்தனர்.

அந்த திமிங்கிலத்தின் உடலைச் சுற்றி பட்டிகள் இணைக்கப்பட்டுள்ளதால் அவை ரஷ்ய  கடற்படை பயிற்சி நிலையமொன்றிலிருந்து தப்பி வந்திருக்கலாம் என அம்மீனவர்கள் கருதினர்.

இந்த வெள்ளைத் திமிங்கிலம் குறித்து கேள்விப்பட்ட அனா மன்சிகா எனும் யுவதி தனது நண்பர்கள் சகிதம் அத் திமிங்கில்ததைப் பார்பதற்காக உள்ளூர் படகுத்துறைக்குச் சென்றார்.

சிறிது நேரத்தல் அத்திமிங்கிலம் அப்படகுத்துறையின் அருகில் வந்தது. அனா மன்சிகா குழுவினர் கண்டு ரசித்துக்கொண்டிருந்தனர். அப்போது அத்திமங்கிலத்தை தொடுவதற்காக அனா மன்சிகாவின் குணிந்தபோது அவரின் கைத் தொலைபேசி கடலில் விழுந்துவிட்டது.

கடலில் வீழ்ந்த தொலைபேசி மீண்டும் கிடைக்கப் போவதில்லை என அக்குழுவினர் எண்ணினர்.

ஆனால், நீருக்கு அடியில் சென்ற அந்த வெள்ளைத் திமிங்கிலம் சிறிது நேரத்தில் தனது வாயில் கைத்தொலைபேசியை கௌவியவாறு நீந்திக்கொண்டு அனா மன்சிகா குழுவினரின் அருகில் வந்தது. இதனால் அனா மன்சிகாவுக்கு மீண்டும் தொலைபேசி கிடைத்தது.

இது குறித்து அவர் கூறுகையில்,  ‘நான் எனது பொக்கெட்டை மூடுவதற்கு மறந்துவிட்டிருந்தேன். திமிங்கிலத்தைத் தொட்டுப் பார்க்கும் ஆசையில் கீழே குணிந்தபோது பொக்கெட்டிலிருந்த எனது கைத் தொலைபேசி கடலில் வீழ்ந்தது. அது மீண்டும் கிடைக்க மாட்டாது என நாம் எண்ணினோம். ஆனால், அத்திமிங்கிலம் கடலுக்குள் சென்று தொலைபேசியை வாயில் கௌவிக்கொண்டு திரும்பி வந்தது’ என்றார்.

வெள்ளைத் திமிங்கிலம் தொலைபேசியுடன் வரும காட்சிகளை அனா மன்சிகாவின் நண்பி ஒருவர் படம்பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேற்படி வெள்ளைத் திமிங்கிலம் ரஷ்யாவினால் உளவுத் திட்டத்துக்காக பயிற்றுவிக்கப்பட்டதாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

அமெரிக்காவும் ரஷ்யாவும் தனது இராணுவத் தேவைகளுக்காக டொல்பின்களுக்கு  பயிற்சியளிக்கும் இரகசிய செயற்திட்டங்களை கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.  சோவியத் ஒன்றியத்தின் டொல்பின் திட்டம் 1990களுடன் நிறைவடைந்ததாக கருதப்படுகிறது.

வீடியோ:

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!
logo