மக்கள் பயன்படுத்தும் நீரில் கழிவுத் தேயிலை: இருதரப்பு விசாரணைகள் ஆரம்பம்

0 152

                                                                                             (பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்)
டிக்கோயாவிலிருந்து காசல்ரீ நீர்த்தேக்கத்துக்கு வரை நீர் ஏந்திச் செல்லும் டிக்கோயா ஆற்றில் தொழிற்சாலை ஒன்றின் கழிவுத் தேயிலை கலக்கபட்டதால் நீர் கறுப்பு நிறமாக மாற்றம் பெற்றுள்ளது.
அன்றாடத்  தேவைக்கு தாம் பயன்படுத்தும் குறித்த டிக்கோயா ஆற்றில் கழிவுத் தேயிலை கலக்கப்பட்டமையால் தாம் பெரிதும் பாதிக்கபட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் பொதுமக்களால் ஹட்டன் பொலிஸாருக்கு அறிவிக்கபட்டதைத் தொடர்ந்து ஹட்டன் பொலிஸாரால் நன்னீர் மீன்பிடி அதிகார சபைக்கு அறிவிக்கபட்டது.
இதனையடுத்து அங்கு சென்ற அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் மேலும் ஹட்டன் பொலிஸாரும் இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!
logo