‘தினமும் செக்ஸ் அவசியமில்லையா?’ என பெண் விமானியிடம் கேட்ட ஆண் விமானி! எயார் இந்தியா விசாரணை நடத்துகிறது

0 487

விமானியான பெண்ணொருவரிடம், ‘தினமும் செக்ஸ் அவசியமில்லையா’ என சிரேஷ்ட விமானியான ஆண் ஒருவர் கேட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து எயார் இந்தியா நிறுவனம் விசாரணை நடத்தி வருகிறது.

பொருத்தமற்ற கேள்விகளைக் கேட்ட சிரேஷ்ட விமானி தொடர்பாக எயார் இந்தியா நிறுவனத்தின் நிர்வாகத்திடம் பெண்ணொருவர் முறைப்பாடு செய்துள்ளார் என அந்நிறுவனத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

ஹைதராபாத் நகரிலுள்ள உணவு விடுதியொன்றில் கடந்த 5 ஆம் திகதி இச்சம்பவம் இடம்பெற்றதாக மேற்படி பெண் தனது முறைப்பாட்டில் செய்துள்ளார்.

இது தொடர்பாக அப்பெண் மேலும் தெரிவிக்கையில், ‘பயிற்சியொன்று முடிந்தவுடன், உணவு விடுதியொன்றில் உணவு உட்கொள்ள வருமாறு மேற்படி சிரேஷ்ட விமானி அழைத்தார்.

அவருடன் சில விமானப் பறப்புகளில் நான் ஈடுபட்டிருந்தேன். அப்போது அவர் நாகரீகமாகவே நடந்துகொண்டார். இதனால்  அவருடன் இரவு 8 மணியளவில் உணவு விடுதிக்குச் சென்றறேன்.

அங்கு தொல்லை ஆரம்பித்தது, தனது மகிழ்ச்சியற்ற திருமண வாழ்க்கை மற்றும் மன அழுத்தம் குறித்து அவர் பேச ஆரம்பித்தர்ர.

எனது கணவர் தொலைவில் வசிக்கும் நிலையில் நான் எப்படி சமாளிக்கிறேன் என அவர் கேட்டார். தினமும் செக்ஸ் உறவு அவசியமில்லையா என அவர் கேட்டார்.நான் சுய இன்பம் அனுபவிப்பதுண்டா எனவும் அவர் கேட்டார். அதன்பின் இனியும் அவருடன் பேசுவதற்குத் தயாரி;ல்லை எனக் கூறிவிட்டு, வாடகைக் கார் ஒன்றை நான் அழைத்தேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

டெக்ஸிக்கு காத்திருந்த அரைமணித்தியாலத்தில் நேரத்தில் மேற்படி சிரேஷ்ட விமானியின் செயற்பாடுகள் மேலும் மோசமடைந்ததாகவும் அப்பெண் தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் வேறு எந்தப் பெண்ணுக்கும் இத்தகைய நிலை ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக, இது குறித்து எயார் இந்தியா நிறுவனத்தின் நிர்வாகத்துக்கு அறிவிப்பதற்குத் தான் தீர்மானித்தாகவும் அப்பெண் கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!
logo