உயிருடன் புதைக்கப்பட்ட குழந்தையை காப்பாற்றிய நாய்

0 699

உயிருடன் புதைக்கப்பட்ட குழந்தை ஒன்றை ஒரு நாய் காப்பாற்றிய சம்பவம் தாய்லாந்தில் இடம்பெற்றுள்ளது.

15 வயதான ஒரு சிறுமி மேற்படி குழந்தையை பிரசவித்திருந்தாள். தான் குழந்தை பெற்ற விடயத்தை பெற்றோரிடமிருந்து மறைப்பதற்காக, அந்த சிசு பிறந்தவுடன் அதை  வயல் ஒன்றில் அச்சிறுமி புதைத்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், பிங்போங் எனும் நாய், குரைத்துக்கொண்டே குழந்தை புதைக்கப்பட்ட இடத்தை காலால் தோண்டிக்கொண்டிருந்தது.

அதையடுத்து, குழந்தையின் கால் மண்ணுக்கு வெளியே தெரிவது அவதானிக்கப்பட்டதாக அந்நாயின் உரிமையாளர் உஷா நிசாய்கா தெரவித்துள்ளார்.

அந்த ஆண் குழந்தையை கிராம மக்கள் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். தற்போது இக்குழந்தை ஆரோக்கியமாக உள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.

மேற்படி நாய் ஏற்கெனவே கார் ஒன்றினால் மோதப்பட்டதால் அதன் ஒரு கால் செயலிழந்திருந்ததாகவும் எனினும் அது மிக விசுவாசமானது எனவும்  அதன் உரிமையாளர் உஷா நிசாய்கா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!
logo