ஆடம்பர காருக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பெயர் கொண்ட இலக்கத் தகடு பெற்ற ரசிகர்

0 395

இசைப்­புயல் ஏ.ஆர்.ரஹ்­மானின் ரசிகர் ஒருவர், தனது பி.எம்.டபிள்யூ. ரக ஆடம்­பர காருக்கு, ஏ.ஆர்.ரஹ்­மானைக் குறிக்கும் இலக்கத் தகட்டைப் பெற்­றுள்ளார்.

சந்தர் எனும் இந்த ரசிகர், ஏ.ஆர்.ரஹ்­மானின் தீவிர விசி­றி­யாக உள்ளார். ஏற்­கெ­னவே ரஹ்­மானை நேரிலும் சந்­தித்­துள்ளார். இந்­நி­லையில், அண்­மையில் பி.எம்.டபிள்யூ. ரக ஆடம்­பர கார் ஒன்றை சந்தர் வாங்­கினார்.

இக்­கா­ருக்கு ‘ஐ லவ் ஏ.ஆர்.ஆர்.’ என அர்த்தம் தொனிக்கும் வகையில், ‘I ARR’ என இலக்கத் தகட்டைப் பொருத்­தி­யுள்­ளார்­சந்தர். இந்த இலக்கத் தகடு பொறிக்­கப்­பட்ட காருடன் தான் பிடித்­துக்­கொண்ட புகைப்­ப­டங்­களை டுவிட்டர் மற்றும் இன்ஸ்­டா­கிராம் சமூக வலைத்­த­ளங்­களில் சந்தர் வெளி­யிட்டார்.

 இப்­ப­டங்­களைப் பார்த்த இசைப்­புயல் ஏ.ஆர்.ரஹ்மான் ‘கவ­ன­மாக வாகனம் செலுத்­துங்கள்’ என பதிலளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!