கத்தார் 2022 உலகக் கிண்ணத்துக்கான இரண்டாவது அரங்கு திறப்பு; புதிதாக திறக்கப்பட்ட அல் ஜனூப் அரங்கில் அமிர் கிண்ணத்தை சுவீகரித்தது அல் துஹெய்ல்

0 162

கத்தார் 2022 உலகக் கிண்ண கால்­பந்­தாட்டப் போட்­டி­களை முன்­னிட்டு அல் வக்­ராவில் புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­பட்டு கடந்த வியா­ழ­னன்று இரவு திறக்­கப்­பட்ட அல் ஜனூப் விளை­யாட்­ட­ரங்கில் நடை­பெற்ற அமிர் கிண்ண இறுதிப் போட்­டியில் அல் சாத் கழ­கத்தை 4 – 1 என்ற கோல்கள் கணக்கில் வெற்­றி­கொண்ட அல் துஹெய்ல் கழகம் சம்­பியன் பட்­டத்தை சுவீ­க­ரித்­தது.

போட்­டியின் 7ஆவது நிமி­டத்தில் அல் சாத் கழகம் சார்­பாக அக்ரம் அலி கோல் ஒன்றைப் போட்டு தனது கழ­கத்தை முன்­னி­லையில் இட்டார். இவர் அல் துஹெய்ல் கழ­கத்தில் விளை­யாடும் யெஹி­யாவின் சகோ­தரர் ஆவார்.

எனினும் 9 நிமி­டங்கள் கழித்து அல் துஹெய்ல் சார்­பாக யெஹியா கோல் நிலையை சமப்­ப­டுத்­தினார்.
அதன் பின்னர் இரண்டு அணி­க­ளுக்கும் இடையில் கடும் போட்டி நில­வி­யது. போட்­டியின் 55ஆவது நிமி­டத்தில் தரிக் சல்­மா­னுக்கு மத்­தி­யஸ்தர் அல் ஜஸிம் சிவப்பு அட்டைக் காட்ட அல் சாத் கழகம் 10 வீரர்­க­ளுக்கு மட்­டுப்­ப­டுத்­தப்­பட்­டது.

அடுத்த ஆறு நிமிட இடை­வெ­ளியில் மொரோக்கோ நாட்­ட­வ­ரான எட்­மில்சன் இரண்டு கோல்­களைப் (59 நி., 62 நி.) போட்டு அல் துஹெய்ல் அணியை முன்­னி­லையில் இட்டார். போட்­டியின் 81ஆவது நிமி­டத்தில் எட்­மில்சன் தனது மூன்­றா­வது கோலைப் போட்டு  அல் துஹெய்ல் கழகம் சம்­பி­ய­னா­வதை உறுதி செய்தார்.

இதே­வேளை, 2022 உலகக் கிண்ண கால்­பந்­தாட்டப் போட்­டி­களை நடத்­த­வுள்ள கத்தார் மேலும் 6 புதிய விளை­யாட்டு அரங்­கு­களை நிர்­மா­ணித்து வரு­கின்­றது. அவற்றில் அல் பெய்த் அரங்கு வருட இறுதியில் திறக்கப்படவுள்ளது.         மற்றைய ஐந்து விளையாட்டரங்குகள் அடுத்த வருடம் பூர்த்தியாகும்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!