இலங்கை – ஸ்கொட்லாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி மழையினால் கைவிடப்பட்டது

0 218

இங்­கி­லாந்து மற்றும் வேல்ஸில் இம் மாதம் ஆரம்­ப­மா­க­வுள்ள உலகக் கிண்ணப் போட்­டிக்கு முன்­னோ­டி­யாக முன்னாள் உலக சம்­பியன் இலங்கை நேற்­று ­முன்­தினம் விளை­யா­ட­வி­ருந்த ஸ்கொட்­லாந்­துக்கு எதி­ரான முத­லா­வது சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி மழை­யினால் முழு­மை­யாக கைவி­டப்­பட்­டது.

இதன் கார­ண­மாக உலகக் கிண்ணப் போட்­டிக்கு தயா­ரா­கி­வரும் இலங்கை அணிக்கு இது பெரும் ஏமாற்­றத்தைக் கொடுத்­துள்­ளது.தென் ஆபி­ரிக்­கா­வுக்கு எதி­ராக 5 போட்­டிகள் கொண்ட தொடரில் முழு­மை­யான தோல்வி உட்­பட கடைசி எட்டு சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ச்­சி­யான தோல்­வி­களைத் தழு­விய நிலையில் இங்­கி­லாந்து பய­ண­மா­கி­யுள்ள இலங்கை அணி ஏதோ ஒரு நம்­பிக்­கை­யுடன் உலகக் கிண்­ணத்தை எதிர்­கொள்­ள­வுள்­ளது.

சனிக்­கி­ழமை நடை­பெ­ற­வி­ருந்த ஸ்கொட்­லாந்­து­டனான முத­லா­வது சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி மழை­யினால் கைவி­டப்­பட்ட நிலையில் செவ்­வா­யன்றும் மழை பெய்­யக்­கூடும் என எதிர்­வு­கூ­றப்­பட்­டுள்­ளதால், இலங்­கையின் இரண்­டா­வது போட்­டியும் நடை­பெ­றுமா என்ற சந்­தேகம் நில­வு­கின்­றது.

அப் போட்டி நடை­பெ­று­மானால் இரண்டு அணி­க­ளுக்கும் தொடரைத் தீர்­மா­னிக்கும் போட்­டி­யாக அது அமையும்.மேலும் இலங்­கையின் சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் அணியின் புதிய தலை­வ­ராக நிய­மிக்­கப்­பட்­டுள்ள திமுத் கரு­ணா­ரட்­ன­வுக்கு முத­லா­வது போட்டி நடை­பெ­றா­ததால் பெரும் ஏமாற்­றத்தைக் கொடுத்­தி­ருக்கும் என்­பதில் சந்­தேகம் இல்லை.

எனவே நாளைய போட்­டியே அவர் இலங்கை அணிக்கு தலைமை தாங்­க­வுள்ள முத­லா­வது சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் போட்­டி­யாக அமை­ய­வுள்­ளது. இதே­வேளை, உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி ஆரம்­ப­மா­வ­தற்கு முன்னர் பலம்­வாய்ந்த இரண்டு அணி­க­ளான தென் ஆபி­ரிக்கா, நடப்பு சம்­பியன் அவுஸ்­தி­ரே­லியா ஆகி­ய­வற்­றுடன் பயிற்சிக் போட்­டி­களில் இலங்கை அணி விளை­யா­ட­வுள்­ளது.

தென் ஆபி­ரிக்­கா­வு­ட­னான போட்டி கார்டிவ் வேல்ஸ் அரங்கில் எதிர்வரும் வெள்ளிக்கிழமையும் அவுஸ்திரேலியாவுடனான போட்டி சௌத்ஹம்ப்டன் ஹாம்ப்ஷயர் போல் விளையாட்டரங்கில் எதிர்வரும் திங்கட்கிழமையும் நடைபெறவுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!