உத்தரகாண்ட் கேதார்நாத் ஆலயத்தில் மோடி விடிய விடிய தியானம்

0 105

ஆன்­மிக பய­ண­மாக உத்­த­ரகாண்ட் பகு­தி­யி­லுள்ள கேதார்நாத் ஆல­யத்­திற்கு சென்ற பிர­தமர் மோடி இரவு முழு­வதும் தொடர் தியா­னத்தை மேற்­கொண்டார்.  மக்­க­ளவைத் தேர்­தலை முன்­னிட்டு கடந்த 2 மாத கால­மாக தீவிர பிரச்­சா­ரத்தில் ஈடு­பட்­டி­ருந்த பிர­தமர் மோடி ஆன்­மிக பய­ண­மாக வெள்­ளிக்­கி­ழமை உத்­த­ரகாண்ட் பகு­தி­யி­லுள்ள கேதார்நாத் ஆல­யத்­திற்கு புறப்­பட்டு சென்றார்.

இடுப்பில் காவித் துண்டை கட்­டி­ய­படி கையில் தடி­யுடன் பிர­தமர் மோடி உத்­த­ரகாண்ட் மக்­களின் பாரம்­ப­ரிய உடையை அணிந்­த­படி கோயி­லுக்குள் சென்றார்.

மோடியின் வரு­கை­யையொட்டி அங்கு பலத்த ஏற்­பா­டுகள் செய்­யப்­பட்­டி­ருந்­தன.

கோயிலைச் சுற்றி வலம் வந்த மோடி பின்னர் அப்­ப­குதி மக்­க­ளுடன் கலந்­து­ரை­யா­டினார்.

அப்­ப­கு­தியில் தற்­போது நடை­பெற்­று­வரும் மேம்­பாட்டுப் பணிகள் பற்­றியும் ஆலோ­சனை செய்தார்.

குறிப்­பாக மோடி அணிந்­தி­ருந்த உடை அங்­கி­ருந்த மக்­களை வெகு­வாக கவர்ந்­தி­ருந்­தது.  பின்பு, மோடி பனிக்­குகை ஒன்­றினுள் சென்று தியானம் செய்யத் தொடங்­கினார்.

அந்த குகையில் மோடிக்­காக ஏற்­க­னவே மெத்தை வச­திகள் அனைத்தும் செய்­யப்­பட்­டி­ருந்­தன. சனிக்­கி­ழமை தியா­னத்தை தொடங்­கிய மோடி விடிய விடிய சுமார் 15 மணி நேரம் தொடர் தியா­னத்தில் இருந்­த­தாக கூறப்­ப­டு­கி­றது. நேற்றுக் காலை தியா­னத்தை முடித்து விட்டு வெளியே வந்த மோடி திடீ­ரென்று அங்­கி­ருந்த செய்­தி­யா­ளர்­களை சந்­தித்தார். 

பதவி ஏற்ற காலத்தில் இருந்து மோடி செய்­தி­யா­ளர்­களை சந்­திப்­பதை தவிர்ப்­ப­தாக, அவர் செய்­தி­யா­ளர்­களின் கேள்­வி­க­ளுக்கு இது­வரை பதில் கூறி­யதே இல்லை என்ற விமர்­சனம் மோடி மீது அதிகம் வைக்­கப்­படும். இந்­நி­லையில் கேதர்நாத் ஆல­யத்­திற்கு சென்­றுள்ள மோடி அங்­கி­ருந்து நாட்டு மக்­க­ளுக்கு முக்­கிய பேட்டி ஒன்றை அளித்தார்.

மோடி பேசி­ய­தா­வது, “நாட்டில் நடப்­பதில் இருந்து விலகி, ஆன்­மீக பய­ண­மாக உத்­த­ரகாண்ட் வந்­துள்ளேன்.

எனக்­காக எதையும் கேட்டு கோவி­லுக்கு செல்­வ­தில்லை.

கேதர்­நாத்தில் வழி­பட்­டதை நான் அதிஷ்­ட­மாக நினைக்­கிறேன்.

எனக்கும் கேதர்­நாத்­துக்கும் ஒரு உணர்­வுபூர்­வான உறவு உள்­ளது.

கேதர்நாத் வளர்ச்­சிக்­காக நான் பணி­யாற்றிக் கொண்­டி­ருக்­கிறேன்.

காணொளிக் காட்சி மூலம் எனக்­கான தக­வல்­களை நான் சேக­ரித்து வரு­கிறேன்.

மன அமைதி பெற கேதார்­நாத்­திற்கு மக்கள் பயணம் செய்ய வேண்டும்.

கொடுப்­ப­தற்­காக நாம் படைக்­கப்­பட்­டுள்ளோம். எடுப்­ப­தற்­காக அல்ல.

இதோ இங்­கி­ருந்து புறப்­பட்டு பத்­ரிநாத் செல்­கிறேன்” என்று கூறினார்.  பேட்­டியை முடித்து விட்டு அங்­கி­ருந்த மக்­களை பார்த்து மோடி உற்­சா­க­மாக கைகளை அசைத்தார்.

    

மோடியை பார்த்த அங்­கி­ருந்த மக்கள் ஆர­வாரம் செய்­தனர். மோடியின் இந்த ஆன்­மிக பயணம் அவர் மீண்டும் பிரதமராக நடத்தப்பட்ட சிறப்பு பிராத்தனை என்ற தகவல்கள் தொடர்ந்து பரவி வருகின்றன. பல்வேறு வகையான ஆலோசனைகள் மற்றும் பூஜைகளுக்கு பின்பு தான் மோடி இந்த ஆன்மிக பயணத்தை துவக்கியதாகவும் கூறப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!