வரலாற்றில் இன்று மே 20: 1902 அமெரிக்காவிடமிருந்து கியூபா சுதந்திரம் பெற்றது

0 124

526: சிரியா, துருக்­கியில் ஏற்­பட்ட பூகம்பம் கார­ண­மாக சுமார் 3 லட்சம் பேர் உயி­ரி­ழந்­தனர்.

1570: முத­லா­வது நவீன உலக வரை­ப­டத்தை ஆப்­ரஹாம் ஓட்­டே­லியஸ் வெளி­யிட்டார்.

1631: ஜேர்­ம­னியின் மட்ஜ்பர்க் நகரை உரோ­ம­னிய படை­யினர் முற்­று­கை­யிட்டு அந்­ந­க­ரி­லுள்ள பெரும்­பா­லான மக்­களை படு­கொலை செய்­தனர்.

1802: பிரான்ஸின் குடி­யேற்­றற நாடு­களில் பிரெஞ்சு மன்னன் நெப்­போ­லி­ய­னினால் மீண்டும் அடிமை முறை ஏற்­ப­டுத்­தப்­பட்­டது.

1882: ஜேர்­மனி, ஆஸ்­தி­ரியா, ஹங்­கேரி நாடு­க­ளுக்­கி­டையில் கூட்­ட­மைப்பு ஏற்­ப­டுத்­தப்­பட்­டது.

1873: அமேரிக்­காவில் லெவி ஸ்ட்ரோஸ் ஜேக்கப் டேவிஸ் ஆகியோர் நீல ஜீன்ஸ்­க­ளுக்கு காப்­பு­ரிமை பெற்­றனர்.

1883: இந்­தோ­னே­ஷி­யாவின் கர­கட்­டோவா எரி­மலை வெடிக்க ஆரம்­பித்­தது. இதனால் சுமார் 36,000 பேர் உயி­ரி­ழந்­தனர்.

1891: தோமஸ் அல்வா எடி­ஸ­னால் கைனெட்­டஸ்கோப் எனும் சினிமா கருவி முதல் தட­வை­யாக இயக்கிக் காண்­பிக்­கப்­பட்­டது.

1899: அமெ­ரிக்­காவில் அதி­வே­க­மாக காரில் பயணம் செய்­த­மைக்­காக முத­லா­வது அப­ராதம் விதிக்­கப்­பட்­டது நியூயோர்க் நகர வீதி­யொன்றில் ஜேக்கப் ஜேர்மன் என்­பவர் மணித்­தி­யா­லத்­துக்கு 12 மைல் (19.31) கி.மீ.) வேகத்தில் பயணம் செய்­த­மைக்­காக அப­ராதம் விதிக்­கப்­பட்­டது.

1902: அமெ­ரிக்­கா­வி­ட­மி­ருந்து கியூபா சுதந்­திரம் பெற்­றது. தோமஸ் எஸ்ட்­ராடா பால்மா, கியூபாவின் முத­லா­வது ஜனா­தி­ப­தி­யானார்.

1927: சார்ள்ஸ் லிண்ட்பேர்க் என்­பவர் நியூயோர்க்­கி­லி­ருந்து பாரிஸ் நோக்கி தனி­யாக விமா­னத்தில் புறப்­பட்டார். அத்­தி­லாந்திக் சமுத்­தி­ரத்தை தனி­யாக எங்கும் நிற்­காமல் கடந்த முதல் விமானி இவ­ராவார்.

1948: சீனாவின் முத­லா­வது ஜனா­தி­ப­தி­யாக சியாங் கே ஷேக் தெரி­வு­செய்­யப்­பட்டார்.

1956: அமெ­ரிக்­காவின் முத­லா­வது ஐத­ரசன் குண்டு பசுபிக் சமுத்­தி­ரத்தில் வீசப்­பட்­டது.

1965: பாகிஸ்தான் விமா­ன­மொன்று எகிப்தின் கெய்ரோ நகரில் விபத்­துக்­குள்­ளா­னதால் 121 பேர் உயி­ரி­ழந்­தனர்.

1980: கன­டா­வி­லி­ருந்து பிரி­வது தொடர்­பாக கியூபெக் மாநி­லத்தில் நடை­பெற்ற வாக்­கெ­டுப்பில் 60 சத­வீ­த­மானோர் பிரி­வி­னைக்கு எதி­ராக வாக்­க­ளித்­தனர்.

1983: எயிட்ஸ் நோய்க்கு கார­ண­மான எச்.ஐ.வி. வைரஸ் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டமை தொடர்­பாக முத­லா­வது தகவல் “சயன்ஸ்” சஞ்­சி­கையில் வெளி­யி­டப்­பட்­டது.

1989: சீனாவின் திய­னமென் சதுக்­கத்தில் ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­டி­ருந்த மாண­வர்­களை எதிர்­கொள்­வ­தற்­காக சீன அரசு இரா­ணுவ சட்­டத்தை பிர­க­ட­னப்­ப­டுத்­தி­யது.

1990: ருமே­னி­யாவில் கம்யூனிஸ ஆட்சி முடி­வ­டைந்­தபின் முதல் தட­வை­யாக ஜனா­தி­பதித் தேர்தல் மற்றும் நாடா­ளு­மன்ற தேர்தல் நடை­பெற்­றது.

2002: கிழக்கு திமோரின் சுதந்­தி­ரத்தை போர்த்­துக்கல் அங்­கீ­க­ரித்­தது.

2006: பங்­க­ளா­தேஷில் ஆடைத்­தொ­ழிற்­சாலை ஊழியர்களான 18 லட்சமர் பேர் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.

2013: அமெரிக்காவின் ஒக்லஹோமாவில் டோர்னடோ சுழற்காற்றினால் 24 பேர் பலியானதுடன் 377 பேர் காயமடைந்தனர்.

2014: நைஜீரியாவில் இடம்பெற்ற இரு குண்டுவெடிப்புகளில் 118 பேர் உயிரிழந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!