குருணாகலில் ஸஹ்ரானின் பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு!

0 590

                                                                                                                     (எம்.எப்.எம்.பஸீர், எம்.மனோசித்ரா)

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் இடம்பெற்று நாளையுடன் (21)  ஒரு மாதம் நிறைவடையும் நிலையில் , தற்கொலைத் தாக்குதல்களுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் 89 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 69 பேர் குற்றப் புலனாய்வுப் பிரிவின் கட்டுப்பாட்டில் வைத்து விசாரிக்கப்பட்டு வருகின்றனர். ஏனைய 20 சந்தேக நபர்களும் பயங்கரவாத தடுப்புப் பிரிவில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

இதேளை, குருணாகல் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட கைதுகள் மற்றும் விசாரணைகளின் அடிப்படையில் பல தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. குருணாகல் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அலகொலதெனிய பிரதேசத்தில் பயிற்சி முகாம் ஒன்றும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை குருணாகல் பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!