தாக்குதலுக்கு இலங்கையை IS தெரிவு செய்யவில்லை: இலங்கையர் குழுவே ISஐ தெரிவு செய்தது!- அமெரிக்க வெளியுறவுக் கொள்கை ஆய்வு நிபுணர் ஜோனா பிளான்க்

0 291

குண்­டுத்­தாக்­கு­தல்­களை நடத்­து­வ­தற்கு இஸ்­லா­மிய அரசு இயக்கம் (ஐ.எஸ்) இலங்­கையைத் தெரிவு செய்­தி­ருக்­க­வில்லை.மாறாக இலங்­கையைச் சேர்ந்த குழு ஒன்றே தங்­க­ளது தாக்­கு­தல்­களை நடத்­து­வ­தற்கு இஸ்­லா­மிய அரசைத் தெரிவு செய்­தி­ருக்­கின்­றது எனத் தோன்­று­வ­தாக அமெ­ரிக்­காவின் கொள்கை ஆராய்ச்சி நிறு­வ­னங்­களில் ஒன்­றான ராண்ட் கோப்­ரே­ஷ­னுக்­காகப் பணி­யாற்றும் வெளி­யு­ற­வுக்­கொள்கை நிபு­ண­ரான ஜோனா பிளான்க் கூறி­யி­ருக்­கின்றார்.

ஸ்ரீலங்கா கார்­டியன் இணை­யத்தின் ஆசி­ரி­ய­ரான நிலாந்த இலங்­க­மு­வ­வுக்கு வழங்­கி­யுள்ள நேர் காண­லி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்­துள்ளார். அவர் மேலும் தெரி­விக்­கையில் இலங்கைத் தீவி­ர­வா­திகள் குழு இஸ்­லா­மிய அரசு இயக்­கத்தைத் தெரிவு செய்­ததைப் போன்று உலகின் வேறெந்தப் பகு­தி­க­ளிலும் கூட நடந்­தி­ருக்க முடியும். ஆனால் இங்கு அவ்­வாறு செய்­த­வர்கள் இலங்­கை­யர்­க­ளாக இருக்­கின்­றார்கள். அவர்கள் தங்­க­ளது பயிற்­சி­க­ளையும், உப­க­ர­ணங்­க­ளையும் இஸ்­லா­மிய அர­சி­ட­மி­ருந்து பெற்­றி­ருக்­கின்­றார்கள்.

இலங்கை அர­சாங்­கத்தின் இரு உயர் தலை­வர்­க­ளான ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும், பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும் வெளிப்­ப­டை­யா­கவே தங்­க­ளுக்குள் மோதிக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். பிர­ஜை­களின் பாது­காப்பை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்கு அவர்­களால் ஒத்­து­ழைத்துச் செயற்­பட முடி­யாது என்றும் அமெ­ரிக்க நிபுணர் கூறி­யி­ருக்­கின்றார்.

கடந்த மாதம் ஈஸ்டர் ஞாயிறு தினத்­தன்று இஸ்­லா­மிய அரசின் இலங்கைக் கிளை­யினர் என்று கூறப்­ப­டு­கின்­ற­வர்­களால் கத்­தோ­லிக்க தேவா­ல­யங்­க­ளிலும், ஆடம்­பர ஹோட்­டல்­க­ளிலும் நடத்­தப்­பட்ட தற்­கொலைக் குண்­டுத்­தாக்­கு­தல்கள் குறித்து உங்­க­ளது அபிப்­பி­ராயம் என்­ன­வென்று ஜோனா பிளான்­கிடம் கேட்­கப்­பட்­ட­போது அவர், ‘இலங்­கையில் நடை­பெற்ற தாக்­கு­தல்கள் கற்­பனை செய்து பார்க்க முடி­யாத அள­வுக்கு மிகவும் கொடூ­ர­மா­னவை.

அவை முற்­றிலும் எதிர்­பார்க்­கப்­ப­டாத தாக்­கு­தல்­க­ளாகும். இலங்கை கொடூ­ர­மான உள்­நாட்டுப் போருக்குத் தாக்­குப்­பி­டித்த நாடு. அந்தப் போர் பெரு­ம­ள­வுக்குப் பயங்­க­ர­வா­தத்­துடன் சம்­பந்­தப்­பட்­டது. ஆனால் அந்தப் போரின்­போது இப்­போது நடை­பெற்­றி­ருப்­பதைப் போன்ற தாக்­கு­தல்கள் ஒரு­போதும் நடை­பெ­ற­வில்லை.

அதா­வது இலங்கை கடந்த காலத்தில் அனு­ப­வித்த பயங்­க­ர­வாதம் பெரும்­பாலும் அர­சி­ய­லையும், இனத்­துவ அடை­யா­ளத்­தையும் அடிப்­ப­டை­யாகக் கொண்­டதே தவிர, மதத்தை அடிப்­ப­டை­யாகக் கொண்­ட­தல்ல. கிறிஸ்­த­வர்கள் அவர்­க­ளது மத நம்­பிக்­கைக்­காக ஒரு­போதும் முன்னர் இலக்கு வைக்­கப்­பட்­ட­தில்லை. இஸ்­லா­மிய அரசு போன்ற சர்­வ­தேச பயங்­க­ர­வாதக் குழுக்கள் முன்­னொ­ரு­போதும் இலங்­கையில் தீவி­ர­மாக இயங்­கி­ய­தில்லை” என்று பதி­ல­ளித்தார்.

இலங்­கையை அவர்கள் ஏன் தெரிவு செய்­தார்கள் என்ற கேள்­விக்குப் பதி­ல­ளித்த அமெ­ரிக்க நிபுணர், ‘இலங்­கையை இஸ்­லா­மிய அரசு இயக்கம் தெரிவு செய்­ய­வில்லை. இலங்கைக் குழு­வொன்று தங்­க­ளது நோக்­கங்­க­ளுக்­காக இஸ்­லா­மிய அரசு இயக்­கத்தைத் தெரிவு செய்து உத­விக்கு நாடி­னார்கள்” என்று குறிப்­பிட்டார்.

கேள்வி : 2009 ஆம் ஆண்டில் முடி­வ­டைந்த விடு­தலைப் புலி­களின் ஆயு­தக்­கி­ளர்ச்­சிக்கும், இலங்­கையில் தங்­போது காணப்­படும் ஜிஹாத் தீவி­ர­வாத அச்­சு­றுத்­த­லுக்கும் இடை­யி­லான வேறு­பா­டுகள் என்ன?
பதில் : இரண்டும் தொடர்­பு­பட்­டவை அல்ல. விடு­தலைப் புலிகள் அவ்­வப்­போது முஸ்­லிம்­க­ளையும் இலக்­கு­வைத்துத் தாக்­கி­னார்கள். ஆனால் கோட்­பாட்டு ரீதி­யான கார­ணங்­க­ளுக்­காக அல்ல.

அர­சியல் கார­ணங்­க­ளுக்­கா­கவே அவ்­வாறு முஸ்­லிம்­களைத் தாக்­கி­னார்கள். அதா­வது புலி­களின் நோக்­கங்­க­ளுக்கு உத­வு­வ­தற்கு முஸ்­லிம்கள் மறுத்த போது இந்தத் தாக்­கு­தல்கள் நடந்­தன. பயங்­க­ர­வாத அச்­சு­றுத்­தலின் தாக்கம் என்று நோக்கும் போது எந்­த­வொரு இஸ்­லா­மியக் குழு­வி­னாலும் தோற்­று­விக்­கப்­படக் கூடிய அச்­சு­றுத்­தலை விடவும் 2009 வரை விடு­தலைப் புலிகள் தோற்­று­வித்த அச்­சு­றுத்­தல்கள் மிக மிகப் பாரி­யவை. ஆனால் அர்ப்­ப­ணிப்புக் கொண்ட சிறிய பயங்­க­ர­வா­திகள் கழு­வினால் எந்­த­ள­விற்கு சேதத்தை ஏற்­ப­டுத்த முடியும் என்­பதை ஈஸ்டர் ஞாயிறு குண்­டுத்­தாக்­கு­தல்கள் காட்­டு­கின்­றன.

கேள்வி : முற்­றிலும் புல­னாய்வுத் தவ­று­களே உயிர்த்த ஞாயிறு குண்­டுத்­தாக்­கு­தல்கள் இடம்­பெ­று­வ­தற்குக் கார­ண­மென்று பலர் வாதி­டு­கின்­றார்கள். ஆனால் வர­லாற்றை நாம் திரும்பிப் பார்ப்­போ­மே­யானால் பல புல­னாய்வு நிறு­வ­னங்­களின் எச்­ச­ரிக்­கைகள் கவ­னத்தில் எடுக்­கப்­ப­டாமல் போயி­ருப்­பதை எம்மால் காண­மு­டி­கின்­றது. அதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்­கின்­றீர்கள்?

பதில் : சம்­பவம் நடந்த பிறகு இவ்­வா­றாகச் சிந்­திப்­பது எப்­போ­துமே சுல­ப­மா­னது. ஆனால் இந்த விட­யத்தில் அர­சாங்கம் உகந்த முறையில் செயற்­படத் தவ­றி­யதன் விளை­வான அர­சியல் தவறே அனர்த்தம் நேர்ந்­த­தற்குக் கார­ணம் போல் தெரி­கி­றது. வெளி­நாட்டுப் புல­னாய்வு நிறு­வனம் ஒன்­றி­ட­மி­ருந்து (பெரும்­பாலும் இந்­தி­யா­வி­லி­ருந்து) எச்­ச­ரிக்­கைகள் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் அலு­வ­ல­கத்­துக்கு தெரி­யப்­ப­டுத்­தப்­பட்­ட­தாகக் கூறப்­பட்­டது. இந்த எச்­ச­ரிக்­கைகள் தொடர்பில் உரிய நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­ப­ட­வில்லை என்றே தோன்­று­கின்­றது.

அந்தப் புல­னாய்வுத் தக­வல்கள் பிர­தமர் விக்­கி­ர­ம­சிங்­க­விற்கும் தெரி­யப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. இதற்கு இரண்டு கார­ணங்கள் உள்­ளன. ஒன்று, ஜனா­தி­பதி பிர­த­மரை நம்­பு­கிறார் இல்லை. அவர்­க­ளுக்­கி­டையில் உறவு முறிந்து போயி­ருக்­கி­றது. 2018 அக்­டோ­பரில் பிர­த­மரைப் பதவி கவிழ்க்க ஜனா­தி­பதி முயற்­சித்தார் என்­பது எல்­லோ­ருக்கும் தெரியும். மற்­றை­யது, தனக்கு மேலாக பிர­த­மரை இந்­தியா விரும்­பு­கி­றது என்று ஜனா­தி­பதி நம்­பு­கின்றார். அதனால் இந்­தியத் தரப்­பி­ட­மி­ருந்து வந்த புல­னாய்வுத் தக­வல்­களை அவர் கணக்­கெ­டுக்­காமல் விட்­டி­ருக்­கக்­கூடும்.

கேள்வி : எதிர்­கா­லத்தில் இத்­த­கைய குண்­டுத்­தாக்­கு­தல்கள் இடம்­பெ­று­வதைத் தடுப்­ப­தற்கு உங்­க­ளிடம் யோச­னைகள் ஏதா­வது இருக்­கின்­றதா?
பதில் : இலங்­கைக்கு என்­னிடம் சில யோச­னைகள் இருக்­கின்­றன. முத­லா­வது, ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் தங்­க­ளுக்­கி­டை­யி­லான அர­சியல் முட்­டுக்­கட்டை நிலையை முடி­விற்குக் கொண்­டு­வர வேண்டும். நாட்டின் இரு உயர் தலை­வர்கள் தங்­க­ளுக்குள் மோதிக் கொண்­டி­ருக்கும் போது அவர்­களால் தங்­களின் பிர­ஜை­களின் பாது­காப்பை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்கு ஒத்­து­ழைக்க முடி­யாது, அவ­சி­ய­மானால் புதிய தேர்­தல்­களை நடத்­தலாம்.

அல்­லது ஒன்­றி­ணைந்து பணி­யாற்­று­வ­தற்கு வழி­வ­கை­களைக் காண­வேண்டும்.இரண்­டா­வ­தாக, பயங்­க­ர­வாத எதிர்ப்புத் தொடர்பில் ஏனைய நாடு­க­ளுடன் புல­னாய்வுத் தக­வலைப் பகிர்ந்­து­கொள்­வதில் ஒத்­து­ழைத்துச் செயற்­பட வேண்டும். இத்­த­டவை இந்­தி­யாவின் புல­னாய்வுத் தக­வல்கள் தொடர்பில் நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வில்லை. இலங்­கைக்கு வழங்­கு­வ­தற்கு இந்­தி­யா­விடம் பெரு­ம­ளவு தக­வல்கள் உள்­ளன. அமெ­ரிக்கா, பிரிட்டன் மற்றும் ஏனைய நாடு­க­ளாலும் கூட அவ்­வாறு புல­னாய்வுத் தக­வல்­களை வழங்க முடியும்.

மூன்­றா­வ­தாக, இலங்கை முஸ்லிம் சமூ­கத்­துடன் சேர்ந்து பணி­யாற்ற வேண்டும். பயங்­க­ர­வாத எதிர்ப்பு மற்றும் கிளர்ச்சித் தடுப்பு விவ­கா­ரங்­களில் இலங்­கையின் கடந்­த­கால நட­வ­டிக்­கைகள் நல்­ல­வை­யாக இல்லை. கொடு­மை­யான நட­வ­டிக்­கை­களின் ஊடாகத் தமிழ் மக்­களை அர­சாங்கம் அந்­நி­யப்­ப­டுத்­தி­யது. அந்த அந்­நி­யப்­ப­டுத்­தலே விடு­தலைப் புலி­க­ளுக்கு ஆத­ரவைப் பெருக்கி அவர்­களை வலுப்படுத்தியது. இலங்கை அரசாங்கம் அதே தவறை அதன் முஸ்லிம் சமூகத்தின் விடயத்தில் இழைக்கக் கூடாது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!