இரத்தினபுரி நகரைப் படம் பிடித்த மூவர் கைது!

0 331

வெசாக் தினமான நேற்று (19) இரத்தினபுரி நகரை படம்பிடித்துக் கொண்டிருந்த மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மூவருக்கும் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பிருக்கலாமென்ற சந்தேகத்தில் அவர்களைத் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கான அனுமதியை பொலிஸார் நீதிமன்றின் ஊடாகப் பெற்றுள்ளனர்.

சந்தேக நபர்கள் மூவரும் இரத்தினபுரி பதில் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவர்களை 72 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரிப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், இவர்கள் மூவரையும் 23 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு பதில் நீதிவான் உத்தரவிட்டார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!