Huawei நிறுவனத்துடனான தொடர்புகளை துண்டித்துக் கொள்வதாக கூகுள் நிறுவனம் அறிவிப்பு

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கு ஹுவேய் அச்சுறுத்தல் எனும் அமெரிக்க அரசாங்கத்தின் குற்றச்சாட்டையடுத்து கூகுள் தீர்மானம்

0 176

சீனாவின் ஹுவேய் (Huawei) நிறு­வ­னத்­து­ட­னான தொடர்­பு­களை துண்­டித்­துக்­கொள்­வ­தாக கூகுள் நிறு­வனம் தெரி­வித்­துள்­ளது.
தொலைத்­தொ­டர்பு சாத­னங்­களின் உற்­பத்­தயில் உலகின் மிகப் பெரிய நிறு­வ­னங்­களில் ஒன்­றாக ஹுவேய் டெக்­னோ­லொஜீஸ் நிறு­வனம் விளங்­கு­கி­றது.

அதே­வேளை, இணைய உலகின் ஜாம்­ப­வா­னாக அமெ­ரிக்­காவின் கூகுள் (Google) நிறு­வனம் விளங்­கு­கின்­ற­னமை குறிப்­பி­டத்­தக்­கது. உலகில் பாவ­னை­யி­லுள்ள பெரும்­பா­லான ஸ்மார்ட்­போன்­களில் கூகு­ளின் அன்ட்ரோய்ட் ஒப்­ப­ரேட்டிங் சிஸ்டம் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றது.

இந்­நி­லையில், ஹுவேய் நிறு­வனத்­து­ட­னான தொடர்­பு­களைத் துண்­டித்­துக்­கொள்­ள­வ­தாக கூகுள் நிறு­வனம் தெரி­வித்­துள்­ளது. அமெ­ரிக்க அரசின் கோரிக்­கை­யி­னா­லேயே கூகுள் நிறு­வனம் இத்­தீர்­மா­னத்தை மேற்­கொண்­டுள்­ளது.5 ஜி வயர்லெஸ் தொழில்­நுட்­பத்­து­றையில் ஹுவேய் நிறு­வனம் முன்­னி­லையில் உள்­ளது. ஆனால், ஹுவேய் நிறு­வ­னத்தின் புதிய சாத­னங்கள் மூலம் .. சீன அர­சாங்கம் கண்­கா­ணிப்­பு­களை மேற்­கொள்ள முடி­கி­றதென அமெ­ரிக்க அர­சாங்கம் குற்றம் சுமத்­தி­யுள்­ளது.

அமெ­ரிக்­காவின் தேசிய பாது­காப்­புக்கு அச்­சு­றுத்­த­லாக அமையும் வெளி­நாட்டு நிறு­வ­னங்­க­ளுடன் தொலைத்­தொ­டர்பு வர்த்­தக நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­டு­வதை தடுக்கும் உத்­த­ரவை அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப் பிறப்­பித்­துள்ளார்.அமெ­ரிக்க நிறு­வ­னங்கள் அனு­ம­திப்­பத்­தி­ர­மின்றி வர்த்­தக நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட முடி­யாத நிறு­வ­னங்­களின் பட்­டி­யலில் ஹுவேய் நிறு­வ­னமும் உள்­ள­டக்­கப்­பட்டு;ள்ளது.

இதை­ய­டுத்து ஹுவேய் நிறு­வ­னத்­து­ட­னான தொடர்­பு­களை துண்­டித்­துக்­கொள்ளும் நட­வ­டிக்­கை­களை தான் ஆரம்­பித்­துள்­ள­தாக கூகுள் நிறு­வனம் தெரி­வித்­துள்­ளது. அமெ­ரிக்க அர­சாங்­கத்தின் உத்­த­ர­வுக்கு தான் கட்­டுப்­பட்டு நடப்­ப­தாக கூகுள் தெரி­வித்­துள்­ளது.

இதனால் ஹுவேய் நிறு­வனம் தயா­ரிக்­க­வுள்ள புதிய ஸ்மார்ட்­போன்­களில் கூகுள் அப்ஸ்கள் கிடைக்­காமல் போகலாம். தற்­போ­தைய ஹுவேய் பாவ­னை­யா­ளர்­க­ளுக்கு கூகுள் பிளே அப் ஸ்டோர் தொடர்ந்து கிடைக்கும். எவ்­வா­றெ­னினும் தற்­போது பாவ­னை­யி­லுள்ள, ஹுவேய் அன்ட்­ரோயிட் சாத­னங்­க­ளுக்கு கூகுள் பிளே அப் ஸ்டோர் தொடர்ந்து கிடைக்கும் என கூகுள் நிறு­வனம் நேற்று திங்­கட்­கி­ழமை தெரி­வித்­தது. கோடிக்­க­ணக்­கான ஹூவேய் பாவ­னை­யா­ளர்­க­ளுக்கு இத்­த­கவல் நிம்­ம­தி­ய­ளிக்­கக்­கூ­டி­ய­தாகும்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!