அமெரிக்காவில் 400 மாணவர்களின் கடன்களை அடைக்கும் கோடீஸ்வரர்; 703 கோடி ரூபாவை நன்கொடையாக வழங்குகிறார்

Robert F. Smith: US billionaire clears 400 student loans

0 362

அமெ­ரிக்­கா­வி­லுள்ள கல்­லூ­ரி­யொன்றில் இவ்­வ­ருடம் பட்டம் பெறும் மாண­வர்­களின் கல்விக் கடன்கள் அனைத்­தையும் தான் அடைக்­க­வுள்­ள­தாக கோடீஸ்­வரர் ஒருவர் உறு­தி­ய­ளித்­துள்ளார்.

ஜோர்­ஜியா மாநி­லத்தின் அட்­லாண்டா நக­ரி­லுள்ள மோர்­ஹவுஸ் கல்­லூ­ரியில் இவ்­வ­ருடம் பட்டம் பெறும் மாண­வர்­க­ளுக்கே இந்த அதிஷ்டம் கிடைத்­துள்­ளது.ரொபர்ட் எவ். ஸ்மித் எனும் வர்த்­த­கரே தாராள மனம் படைத்த இக்­கொ­டை­யாளி ஆவார்.

நேற்­று­முன்­தினம் ஞாயிற்­றுக்­கி­ழமை இக்­கல்­லூ­ரியின் பட்­ட­ம­ளிப்பு விழா நடை­பெற்­றது. இவ்­வி­ழாவில் ரொபர்ட் எவ். ஸ்மித் அதி­தி­யாக கலந்­து­கொண்டு உரை­யாற்­றினார். அவ­ருக்கு கௌரவப் பட்­ட­மொன்றும் இவ்­வி­ழாவில் வழங்­கப்­பட்­டது. இந்­நி­கழ்வில், ரொபர்ட் எவ். ஸ்மித் உரை­யாற்­று­கையில், மோர்­ஹவுஸ் கல்­லூ­ரியில் இவ்­வ­ருடம் பட்டம் பெறும் மாண­வர்கள் பெற்ற அனைத்து கல்விக் கடன்­க­ளையும் தான் அடைப்­பதாக உறு­தி­ய­ளித்து மாண­வர்­க­ளுக்கு இன்ப அதிர்ச்­சி­ய­ளித்தார்.

சுமார் 400 மாண­வர்­களின் கடன்கள் இவ்­வாறு அடைக்­கப்­ப­ட­வுள்­ளன. இம்­மா­ண­வர்கள் சரா­ச­ரி­யாக 30,000 அமெ­ரிக்க டொலர்­களை (சுமார் 52 இலட்சம் ரூபா, ச 20 இலட்சம் இந்திய ரூபா)) கல்விக் கட­னாகப் பெற்­றுள்­ளனர் எனத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

இதன்­படி, மொத்­த­மாக 4 கோடி அமெ­ரிக்க டொலர்­களை (சுமார் 703 கோடி இலங்கை ரூபா, 280 கோடி இந்திய ரூபா) ரொபர்ட் எவ். ஸ்மித் நன்­கொ­டை­யாக வழங்­க­வுள்ளார். இத்­திட்­டத்­துக்­காக தானும் தனது குடும்­பமும் நிதி­ய­மொன்றை ஆரம்­பிக்­க­வுள்­ள­தாக ஸ்மித் அறி­வித்தார்.

மோர்­ஹவுஸ் கல்­லூ­ரி­யா­னது 1867 ஆம் ஆண்டு ஸ்தாபிக்­கப்­பட்­டது. இது கறுப்­பி­னத்­த­வர்­களின் கல்­விக்­காக ஸ்தாபிக்­கப்­பட்ட ஆண்கள் கல்­லூ­ரி­யொன்­றாகும் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.56 வய­தான ரொபர்ட் எவ். ஸ்மித், கோர்ணல் பல்­க­லைக்­க­ழகம் மற்றும் கொலம்­பியா வர்த்­தக பாட­சாலை ஆகி­ய­வற்றில் கல்வி கற்ற இரச­ாய­ன­வியல் பொறி­யி­ய­லாளர் ஆவார். வங்­கித்­துறை வர்த்­த­கத்­திலும் அவர் பிர­ப­ல­மா­னவர்.

விஸ்டா ஈக்­விட்டி பார்ட்னர்ஸ் எனும் முத­லீட்டு மற்றும் மென்­பொருள் தொழில்­நுட்ப நிறு­வ­னத்தின் தலைவர் மற்றும் பிர­தம நிறை­வேற்று அதி­கா­ரி­யாக அவர் பதவி வகிக்­கிறார்.

போர்ப்ஸ் சஞ்­சி­கையின் கடந்த வருட மதிப்­பீட்­டின்­படி அமெ­ரிக்­காவின் மிகப் பெரிய செல்வந்தர்களின் பட்டியலில்ரொபர்ட் எவ். ஸ்மித் 163 ஆவது இடத்தில் இருந்தார். அவரின் செல்வ மதிப்பு 440 கோடி டொலர் (சுமார் 77,343.20 கோடி இலங்கை ரூபா, 30,700 கோடி இந்திய ரூபா) என அச்சஞ்சிகையால் மதிப்பிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வீடியோ:

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!