பிரதமர் ரணிலின் நாடாளுமன்ற உறுப்புரிமையை சவாலுக்குட்படுத்திய மனு விசாரணையின்றி நிராகரிப்பு

0 216

பிரதமர் ரணில் விக்கிரசிங்கவின் நாடாளுமன்ற உறுப்புரிமையை நீக்குமாறு ரிட் கட்டளையொன்றை பிறப்பிக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாமல் மேன்முறையீட்டு நீதிமன்றினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

ஷிரான் குணரத்ன மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோரடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் குழாம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.  கொழும்பு மாநகர சபை உறுப்பினர் ஷர்மிளா கோணவலவினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கின் சாட்சியாக முன்வைக்கப்படவேண்டிய ஆவணங்களின் மூலப்பிரதிகள் நீதிமன்றில் முன்வைக்கப்படாமையினால் இதனை விசாரிக்க மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை என, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சார்பில் ஆஜராகியிருந்த ஜனாதிபதி சட்டத்தரணி கே. கனக ஈஸ்வரன் அடிப்படை ஆட்சேபனையை முன்வைத்ததுடன். குறித்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல் நிராகரிக்குமாறு கோரியிருந்தார்.

அந்த அடிப்படை ஆட்சேபனையை ஏற்றுக்கொண்டதாக தெரிவித்த நீதிபதிகள் குழாம், மனுவை விசாரணைக்கு எடுத்து கொள்ளாமல் நிராகரிப்பதாக தெரிவித்தது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!