‘எனது பசுக்களைத் திருடியவர்கள் அவற்றைக் கொல்ல வேண்டாம்!’ உரிமையாளர் கோரிக்கை

0 500

                                                                                                                             (மதுரங்குளி நிருபர்)
ஆராச்சிக்கட்டு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொட்டபிட்டிய பிரதேசத்தில் உள்ள பண்ணை ஒன்றிலிருந்து கன்று போடும் நிலையில் காணப்பட்ட மூன்று பசு மாடுகளுடன் கோழிகளும் திருடிச் செல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக ஆராச்சிக்கட்டு பொலிஸார் தெரிவித்தனர். இந்தத் திருட்டு தொடர்பில் நேற்று முன்தினம் செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்தே இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில் அந்தப் பண்ணையின் உரிமையாளர் தெரிவிக்கையில் ‘எனது பண்ணையிலிருக்கும் பிராணிகளை இறைச்சிக்காக விற்பதில்லை’. பால் கலந்து விற்பனை செய்வேன். இந்த பசுக்களைத் திருடியவர்கள் அவற்றைக் கொல்ல வேண்டாம். அவற்றை நன்றாகப் பார்த்துக் கொள்ளுங்கள். நாட்டுக் கோழிகள் முட்டை போடும். அவற்றிலிருந்து பயனடைந்து கொள்ளுமாறு தயவுடன் கேட்டுக் கொள்கிறேன்’ என கூறியுள்ளார்.

ஆராச்சிக்கட்டு பொலிஸார் இத்திருட்டு தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!