யுக்ரைனின் ஜனாதிபதியாக பதவியேற்ற நகைச்­சுவை நடிகர் ஸெலென்ஸ்கி

0 279

ஊழ­லுக்கு எதி­ரான கதா­பாத்­தி­ரத்தில் தோன்­றி­யதன் மூலம் குறு­கிய காலத்தில் மிகப்­பெ­ரிய செல்­வாக்கை பெற்ற நகைச்­சுவை நடிகர் வொலொ­டிமிர் ஸெலென்ஸ்கி யுக்ரைன் நாட்டின் புதிய ஜனா­தி­ப­தி­யாக நேற்று பத­வி­யேற்றார்.

அண்­மையில் நடை­பெற்ற யுக்­ரை­னிய ஜனா­தி­பதித் தேர்­தலின் முதல் கட்­டத்தில் பெட்ரோ பொரோ­ஷென்­கோவை விட ஜெலன்ஸ்கி 70 சத­வீதம் அதிக வாக்­கு­களை பெற்று முன்­னிலை பெற்றார். இரண்­டா­வது கட்ட தேர்­த­லிலும் ஸெலென்ஸ்கி சுமார் 74 சத­வீத வாக்­கு­களை கைப்­பற்றி அமோக வெற்­றி­பெற்றார்.

ஸெலென்ஸ்கி கதா­நா­ய­க­னாக நடித்த ‘மக்­க­ளுக்­கான வேலைக்­காரன்’ (சர்வண்ட் ஆப் பீப்பிள்) என்­கிற டி.வி. தொடர் கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் ஒளி­ப­ரப்­பாகத் தொடங்­கி­யது.கதை­யின்­படி பள்­ளிக்­கூட ஆசி­ரி­ய­ரான ஸெலென்ஸ்கி, நாட்டில் நடக்கும் ஊழலை விமர்­சித்து பேசும் வீடியோ சமூ­க­வலைத் தளங்­களில் வேக­மாக பரவி, அதன் மூலம் அவர் நாட்டின் ஜனா­தி­ப­தி­யாவார்.

இந்த கதைக்­க­ளம்தான் ஸெலென்ஸ்­கியை அர­சி­ய­லுக்கு வரத் தூண்­டி­யது. ‘மக்­க­ளுக்­கான வேலைக்­காரன்’ தொடர் மக்­க­ளிடம் பெரும் ஆத­ரவை பெற்­றதன் மூலம், யுக்ரைன் மக்கள் தற்­போ­தைய அரசின் மீது அதி­ருப்­தியில் இருப்­பதை அவர் தெரிந்­து­கொண்டார்.

இதை­ய­டுத்து, தனது டி.வி. தொடரின் தலைப்­பையே தனது கட்­சியின் பெய­ராக கொண்டு ‘மக்­க­ளுக்­கான வேலைக்­காரன்’ என்ற கட்­சியை கடந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்­கினார். மாற்­றத்தை விரும்பும் மக்­களின் மன­நி­லையை உணர்ந்து, ஜனா­தி­பதித் தேர்­தலில் கள­மி­றங்­கினார்.

அதன்­ப­டியே மாற்­றத்­துக்­காக மட்­டுமே அர­சி­யலில் துளியும் அனு­பவம் இல்­லாத ஸெலென்ஸ்­கியை ஜனா­தி­ப­தி­யாக மக்கள் தேர்வு செய்­தனர்.  இந்­நி­லையில், யுக்ரைன் நாட்டின் புதிய ஜனா­தி­ப­தி­யாக நாடா­ளு­மன்­றத்தில் நேற்று நடை­பெற்ற பத­வி­யேற்பு விழாவில் பைபிள் மற்றும் அந்­நாட்டின் அர­சி­ய­ல­மைப்பு சட்டப் புத்­த­கத்­தின்­மீது கைவைத்து ’உக்ரைன் நாட்டின் இறை­யாண்மை மற்றும் சுதந்­தி­ரத்தை பேணிப் பாது­காப்பேன்’ என அவர் உறு­தி­மொழி ஏற்றார்.

பின்னர், தன்னை ஜனா­தி­ப­தி­யாக தேர்வு செய்த மக்களுக்கு நன்றி தெரிவித்த அவர், ‘பொதுமக்களுக்கு சேவை செய்யும் மனப்பான்மை கொண்டவர்கள் அதிகாரத்துக்கு வர வேண்டும்’ என்று குறிப்பிட்டார். 

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!