வரலாற்றில் இன்று மே 21 : 1991 ராஜீவ் காந்தி கொல்லப்பட்டார்

0 179

878: இத்­தா­லி­யியன் சைரகஸ் நகரம், சிசி­லியின் சுல்­தா­னினால் கைப்­பற்­றப்­பட்­டது.

996: ரோம ராஜ்­ஜி­யத்தின் சக்­க­ர­வர்த்­தி­யாக 16 வய­தான 3 ஆம் ஒட்டோ முடி­சூட்­டப்­பட்டார்.

1471: இங்­கி­லாந்து மன்னர் 6 ஆம் ஹென்றி குத்திக் கொல்­லப்­பட்டார்.

1502: சென் ஹெலீனா தீவை போர்த்­துக்­கேய கட­லோடி ஜாவோடா நோவா கண்­டு­பி­டித்தார். 1815 இல் பிரெஞ்சு மன்னன் நெப்­போ­லி­யனை இத்­தீவில் பிரித்­தா­னி­யர்கள் தடுத்து­வைத்­தனர்.

1851: கொலம்­பி­யாவில் அடிமை முறை ஒழிக்­கப்­பட்­டது.

1881: அமெ­ரிக்க செஞ்­சி­லுவைச் சங்கம் ஸ்தாபிக்­கப்­பட்­டது.

1904: சர்­வ­தேச கால்­பந்­தாட்டச் சங்­கங்­களின் சம்­மே­ள­னம் (ஃபீஃபா) பாரிஸ் நகரில் ஸ்தாபிக்­கப்­பட்­டது.

1917: அமெ­ரிக்­காவின் அட்­லாண்டா நகரில் ஏற்­பட்ட தீயினால் சுமார் 2000 கட்­டி­டங்­க­ளுடன் சுமார் 300 ஏக்கர் நிலப்­ப­ரப்பு அழிந்­தது.

1927: அத்­தி­லாந்திக் சமுத்­தி­ரத்தை தனி­யாக கடந்த முதல் விமா­னி­யான சார்ள்ஸ் லிண்ட்பேர்க், பாரிஸ் நகரை சென்­ற­டைந்தார்.

1934: அமெ­ரிக்­காவின் அயோவா மாநி­லத்­தி­லுள்ள ஒஸ­க­லூஸா நகரம் தனது நக­ர­வா­சிகள் அனை­வ­ரி­னதும் கைவிரல் அடை­யா­ளங்­களை பதி­வு­செய்யும் நட­வ­டிக்­கையை ஆரம்­பித்­தது.

1936: ஜப்­பானின் டோக்­கியோ நகரில் சாடா அபே எனும் பெண் தனது இறந்த காத­லனின் துண்­டிக்­கப்­பட்ட அந்­த­ரங்க உறுப்­புடன் வீதியில் திரிந்­த­போது கைது செய்­யப்­பட்டாள்.

1990: வடக்கு யேமனும் தெற்கு யேமனும் ஒன்­றி­ணை­வ­தற்கு இணங்­கின.

1991: இந்­தி­யாவின் முன்னாள் பிர­தமர் ராஜீவ் காந்தி, தமிழ்­நாட்டின் ஸ்ரீ பெரம்­புத்­தூரில் இடம்­பெற்ற குண்­டுத்­தாக்­கு­தலில் கொல்­லப்­பட்டார்.

1996: தான்­ஸா­னி­யா­வி­லுள்ள விக்­டோ­ரியா ஏரியில் கப்­ப­லொன்று கவிழ்ந்­ததால் சுமார் 1000 பேர் உயி­ரி­ழந்­தனர்.

2003: அல்­ஜீ­ரி­யாவில் ஏற்­பட்ட பூகம்­பத்­தினால் 2000 பேர் உயி­ரி­ழந்­தனர்.

2005: உலகின் மிக உய­ர­மான ரோலர் கோஸ்டர் அமெ­ரிக்­காவின் நியூ ஜேர்ஸி மாநி­லத்தில் திறந்து வைக்­கப்­பட்­டது.

2006: சேர்­பி­யா­வி­லி­ருந்து பிரிந்து செல்­வ­தற்கு ஆத­ர­வாக மொன்­டி­னெக்ரோ மக்கள் வாக்­க­ளித்­தனர்.

2012: 2010 பெப்­ர­வ­ரியில் கைது செய்­யப்­பட்ட இலங்­கையின் முன்னாள் இரா­ணுவத் தள­ப­தியும் ஜன­நா­யகக் கட்­சியின் தலை­வ­ரு­மான ஜெனரல் சரத் பொன்­சேகா சிறை­யி­லி­ருந்து விடு­தலை செய்­யப்­பட்டார்.

2012: யேமனின் சனா நகரில் இடம்­பெற்ற தற்­கொலை குண்டுத் தாக்­கு­தலில் சுமார் 120 பேர் உயிரிழந்தனர்.

2014: அமெரிக்காவில் செப்டெம்பர் 11 நூதனசாலை பொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்பட்டது.

  2016: ஜெயந்தி குரு உதும்பால, எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்த முதல் இலங்கையரானார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!