இந்திய, பாகிஸ்தான் உலகக் கிண்ணப் போட்டிக்கான டிக்கெட்டுகள் 48 மணித்தியாலங்களில் விற்பனை

0 222

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி அண்­மித்­துக்­கொண்­டி­ருக்கும் நிலையில் உலகம் முழு­வதும் உள்ள இர­சி­கர்கள் தத்­த­மது விருப்­புக்­கு­ரிய அணி­களின் பெறு­பே­றுகள் தமக்கு சாத­க­மாக அமை­ய­வேண்டும் என்ற எதிர்­பார்ப்பில் திளைத்­தி­ருப்­பது வியப்­ப­தற்­கில்லை.

குறிப்­பாக இந்­தி­யா­வுக்கும் பாகிஸ்­தா­னுக்கும் இடை­யி­லான உலகக் கிண்ணப் போட்டி என்­பது ஒவ்­வொரு முறையும் இரண்டு நாட்­ட­வர்­க­ளுக்கும் மட்­டு­மல்­லாமல் முழு உல­கை­யுமே பர­ப­ரப்பில் ஆழ்த்­த­வல்ல போட்­டி­யாகும்.இந்­தி­யா­வுக்கும் பாகிஸ்­தா­னுக்கும் இடை­யி­லான போட்டி மென்­செஸ்டர் ஓல்ட் ட்ரபோர்ட் விளை­யாட்­ட­ரங்கில் ஜூன் 16ஆம் திகதி நடை­பெ­ற­வுள்ள நிலையில் அப் போட்­டிக்­கான நுழைவுச் சீட்­டுகள் 48 மணித்­தி­யா­லங்­களில் விற்­பனை செய்­யப்­பட்டு விட்­ட­தாக தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.

இப் போட்­டிக்­காக ஈ டிக்­கெட்­டு­களை விட விற்­பனை செய்­யப்­பட்ட 25,000 நுழைவுக் சீட்­டுக்­களைப் பெறு­வ­தற்கு 5 இலட்சம் பேர் முயற்சி செய்­துள்­ள­தாகக் கூறப்­ப­டு­கின்­றது.

அத்­துடன் இப் போட்­டியை முன்­னிட்டு பாது­காப்பும் பலப்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளது. இப் போட்டிக்கென பெருமளவிலான பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்படுவர் என நம்பப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!