வரலாற்றில் இன்று மே 22 : 1972 இலங்கை குடியரசாகியது, சிலோன் எனும் பெயர் ஸ்ரீ லங்கா என மாற்றப்பட்டது

0 188

1807: அமெ­ரிக்க முன்னாள் உப ஜனா­தி­பதி ஆரோ­னுக்கு எதி­ராக தேசத்­து­ரோக வழக்கில் நீதி­மன்­றினால் குற்­றச்­சாட்டு பத்­திரம் கைய­ளிக்­கப்­பட்­டது.

1809: ஆஸ்­தி­ரி­யாவின் வியன்­னா­வுக்கு அருகில் நடந்த அஸ்பேர்ன் எஸ்லிங் சமரில் பிரான்ஸின் நெப்­போ­லி­யனின் படை முதல் தட­வை­யாக எதிரி இரா­ணு­வ­மொன்­றினால் தோற்­க­டிக்­கப்­பட்­டது.

1840: பிரிட்­டனில் குற்­ற­வா­ளி­க­ளாக தீர்ப்­ப­ளிக்­கப்­பட்­ட­வர்­களை அவுஸ்­தி­ரே­லி­யாவின் நியூ சௌத் வேல்ஸில் குடி­யேற்றும் நடை­முறை ஒழிக்­கப்­பட்­டது.

1906: ரைட் சகோ­த­ரர்­க­ளுக்கு “பறக்கும் இயந்­தி­ரத்­திற்­காக” 821,393 எனும் இலக்கம் கொண்ட அமெ­ரிக்க காப்­பு­ரிமை வழங்­கப்­பட்­டது.

1915: ஸ்கொட்­லாந்தில் மூன்று ரயில்கள் ஒன்­று­ட­னொன்று மோதி­யதால் 227 பேர் உயி­ரி­ழந்­த­துடன் 246 பேர் காய­ம­டைந்­தனர்.

1920: மெக்­ஸிகோ ஜனா­தி­பதி கர்­ரன்ஸா படு­கொலை செய்­யப்­பட்டார்.

1939: அடோல்வ் ஹிட்லர் தலை­மை­யி­லான ஜேர்­ம­னிக்கும் முஸோ­லினி தலை­மை­யி­லான இத்­தா­லிக்கும் இடையில் உடன்­ப­டிக்கை கையெ­ழுத்­தி­டப்­பட்­டது.

1941: கிறீஸ் மன்னர் நாட்­டை­விட்டு வெளி­யேறி எகிப்­துக்குச் சென்றார்.

1947: துருக்கி, கிறீஸ் நாடு­களில் கம்யூனிஸ அமைப்­பு­க­ளுக்கு எதி­ராக போரா­டு­வ­தற்­காக அந்­நா­டு­க­ளுக்கு உத­வி­ய­ளிக்கும் சட்­ட­மொன்றில் அமெ­ரிக்க ஜனா­தி­பதி ஹரி ட்ரூமன் கையெ­ழுத்­திட்டார்.

1958: இலங்­கையில் பாரிய இனக்­க­ல­வரம் மூண்­டது. மே 27 ஆம் திக­தி­வரை தொடர்ந்த வன்­மு­றை­களில் சுமார் 300 பேர் உயி­ரி­ழந்­த­தாக மதிப்­பி­டப்­பட்­டது.

1960: சிலியில் 9.5 ரிச்டர் அள­வி­லான பூகம்பம் ஏற்­பட்­டது. வர­லாற்றில் பதி­வு­செய்­யப்­பட்ட மிக சக்­தி­வாய்ந்த பூகம்பம் இது­வாகும்.

1962: அமெ­ரிக்­காவில் விமா­ன­மொன்றில் குண்­டு ­வெ­டித்­ததால் 45 பேர் உயி­ரி­ழந்­தனர்.

1968: அமெ­ரிக்க அணு­சக்தி நீர்­மூழ்­கி­யான யூ.எஸ்.எஸ். ஸ்கோர்ப்­பியன் கட்­டுப்­பா­டின்றி மூழ்­கி­யதால் 99 படை­யினர் பலி­யா­கினர். இதற்­கான காரணம் கண்­ட­றி­யப்­ப­ட­வில்லை.

1972: இலங்கை குடி­ய­ர­சா­கி­யது. சிலோன் எனும் பெயர் “ஸ்ரீ லங்கா” என மாற்­றப்­பட்­டது. வில்­லியம் கோபல்­லாவ முத­லா­வது ஜனா­தி­ப­தி­யானார்.

1972: அமெ­ரிக்க ஜனா­தி­பதி நிக்ஸன், மொஸ்­கோ­வுக்கு விஜயம் செய்தார். சோவியத் யூனிய­னுக்கு விஜயம் செய்த முதல் அமெ­ரிக்க ஜனா­தி­பதி இவ­ராவார்.

1987: முத­லா­வது றக்பி உல­கக்­கிண்ண சுற்­றுப்­போட்டி நியூஸிலாந்தில் ஆரம்­ப­மா­கி­யது.

1990: வடக்கு, தெற்கு யேமன் ஒன்­றி­ணைந்து யேமன் குடி­ய­ரசை உரு­வாக்­கின.

1990: மைக்­ரோசொவ்ட் நிறு­வனம் விண்டோஸ் 3.0 மென்­பொ­ருளை வெளி­யிட்­டது.

1992: பொஸ்­னியா, ஹேர்­ஸ­கோ­வினா, குரோ­ஷியா, ஸ்லோவே­னியா ஆகி­யன ஒன்­றி­ணைந்­தன.

2011: அமெ­ரிக்­காவின் மிஸோரி மாநி­லத்தில் வீசிய சுழற்­காற்­றினால் 161 பேர் உயி­ரி­ழந்­தனர்.

2012: உலகின் மிக உய­ர­மான கோபு­ர­மான “டோக்­கியோ ஸ்கை ட்றீ” (634 மீற்றர் உயரம்) டோக்­கியோ நகரில் ஸ்தாபிக்­கப்­பட்­டது.

2014: சீனாவின் ஸின்­ஜியாங் மாகா­ணத்தின் உறும்கி நகரில் இடம்­பெற்ற குண்­டு­வெ­டிப்பில் 43 பேர் பலி­யா­ன­துடன் 91 பேர் காய­ம­டைந்­தனர்.

2017: பிரிட்டனின் மன்செஸ்டர் நகரில் நடைபெற்ற, பாடகி ஆரியானா கிரேன்டேவின் இசை நிகழ்ச்சியில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலால் 22 பேர் இறந்ததுடன் சுமார் 800 பேர் காயமடைந்தனர்.

2017: இலங்கை அமைச்சரவை மாற்றப்பட்டது. 9 அமைச்சுகள், ஒரு இராஜாங்க அமைச்சுக்கான அமைச்சர்கள் பதவியேற்றனர்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!