ஞானசார தேரரை விடுவிப்பதற்கு கையெழுத்திட்டார் ஜனாதிபதி!

0 309

                                                                                                                                             (எம்.எப்.எம்.பஸீர்)
நீதிமன்ற அவமதிப்பு தொடர்பில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை பொது மன்னிப்பின் கீழ் விடுவிப்பதற்கான ஆவணங்களில் ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன இன்று (22) மாலை கையெழுத்திட்டுள்ளார்.

ஞானசார தேரரை விடுவிப்பதற்க சிறைச்சாலையிடமிருந்து நேற்று (21)  ஜனாதிபதி செயலகம் அறிக்கை கோரியிருந்தது. சிறையில் ஞானசார தேரரின் நடவடிக்கைகள் மற்றும் அவருக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனைகளை உள்ளடக்கிய இந்த அறிக்கை நேற்று ஜனாதிபதி செயலகத்துக்கு அனுப்பப்பட்டிருந்தது.
இந்நிலையிலேயே அவரை விடுவிப்பதற்கான ஆவணத்தில் இன்று மாலை ஜனாதிபதி கையெழுத்திட்டுள்ளதாக பொது பல சேனா அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் டிலந்த விதானகே மெட்ரோ நியூஸுக்கு தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!