சவூதியில் கைதான NTJ ஆயுதப்படை பிரதானி மில்ஹானை நாட்டுக்கு அழைத்துவர திட்டம்!

0 462

                                                                                                                        (எம்.எப்.எம்.பஸீர்)

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று  இடம்பெற்ற தொடர் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் தற்போது  முன்னெடுக்கப்படும்  சி.ஐ.டி. விசாரணைகளுக்கு  9 சர்வதேச சிறப்பு விசாரணை நிறுவனங்கள்  உதவி வருவதாகவும், அவர்களது குழுவினர் இங்கிருந்தவாறு இந்த உதவி ஒத்தாசைகளை முன்னெடுப்பதாகவும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

 சி.ஐ.டி.யின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்னவின் கீழ்  15 குழுக்கள் முன்னெடுக்கும்  சிறப்பு விசாரணைகளுக்கு இந்த 9 வெளிநாட்டு விசாரணை நிறுவனங்களும் தொழில் நுட்ப ரீதியாகவும் ஏனைய உதவிகளையும் வழங்குவதாக அவர் சுட்டிக்காட்டினார். 21/4 தாக்குதல்களின் பின்னரான விசாரணை நிலைமைகள் தொடர்பில் விளக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்நிலையில் இவ்வாறு  இலங்கை விசாரணையாளர்களுடன் களத்தில் உள்ள வெளிநாட்டு விசாரணை நிறுவனங்களில் எப்.பி.ஐ., ஸ்கொட்லன்ட் யார்ட், அவுஸ்திரேலிய பெடரல் பொலிஸ் மற்றும் நியூஸிலாந்து  ஆகிய சிறப்பு விசாரணையாளர்கள்  இணைந்து செயற்படுவதாக  பொலிஸ் தலைமையகத்தின் உயர் அதிகாரி ஒருவர்   சுட்டிக்காட்டினார்.

இதனிடையே சவூதி அரேபியாவில்   கைது செய்யப்பட்டுள்ள தேசிய தெளஹீத் ஜமாஅத் அடிப்படைவாத அமைப்பின்  ஆயுதப்  பிரிவுக்கு பொறுப்பாக இருந்தவர் என கண்டறியப்பட்டுள்ள மொஹம்மட் மில்ஹான் உள்ளிட்ட  நால்வரை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!