வரலாற்றில் இன்று மே 24 : 1993 எரித்திரியா சுதந்திரம் பெற்றது

0 165

1738 : மெத­டிஸ்த இயக்கம் ஜோன் வெஸ்­லியால் ஆரம்­பிக்­கப்­பட்­டது.

1798 : அயர்­லாந்தில் பிரித்­தா­னிய ஆக்­கி­ர­மிப்­புக்கு எதி­ராக ஐரிஷ் எழுச்சி ஆரம்­ப­மா­யிற்று.

1844 : முத­லா­வது மின்­னியல் தந்திச் செய்தி சாமுவேல் மோர்ஸ் என்­ப­வரால் வாஷிங்டன் டிசியில் இருந்து மேரி­லாந்­துக்கு அனுப்­பப்­பட்­டது.

1883 : நியூ யோர்க்கில் புரூக்ளின் பாலம் திறந்து விடப்­பட்­டது.

1901 : தெற்கு வேல்ஸில் இடம்­பெற்ற விபத்தில் 78 சுரங்கத் தொழி­லா­ளர்கள் கொல்­லப்­பட்­டனர்.

1941 : இரண்டாம் உலகப் போர்: வடக்கு அட்­லாண்டிக் பெருங்­க­டலில் “பிஸ்மார்க்” என்ற ஜெர்மன் போர்க்­கப்பல் “ஹ_ட்” என்ற பிரித்­தா­னியக் கப்­பலைத் தாக்கி மூழ்­க­டித்­தது.

1956 : சுவிட்­ஸர்­லாந்தில் முத­லா­வது யூரோ­விஷன் பாடல் போட்டி இடம்­பெற்­றது.

1962 : அமெ­ரிக்க விண்­வெளி வீரர் ஸ்கொட் கார்ப்­பென்டர் அவ்­ரோரா 7 விண் கலத்தில் மூன்று முறை பூமியைச் சுற்றி வந்தார்.

1976: லண்டன், வோஷிங்டன் டி.சி. நக­ரங்­க­ளுக்­கி­டையில் கொன்கோர்ட் விமான சேவை ஆரம்­ப­மா­கி­யது.

1991 : எத்­தி­யோப்­பி­யா­வி­லி­ருந்து யூதர்­களை இஸ்­ரே­லுக்குக் கொண்டு வரும் “சொலமன்” நட­வ­டிக்­கையை இஸ்ரேல் ஆரம்­பித்­தது.

1992: தாய்­லாந்து சர்­வா­தி­காரி ஜெனரல் சுசிந்தா க்ரபி­ரயூன், எதிர்ப்பு ஆர்ப்­பாட்­டங்­க­ளை­ய­டுத்து இரா­ஜி­னாமா செய்தார்.

1993 : எதி­யோப்­பி­யா­வி­ட­மி­ருந்து எரித்­தி­ரியா சுதந்­திரம் பெற்­றது.

1994: நியூயோர்க் உலக வர்த்­தக நிலைய கட்­டத்தில் 1993 ஆம் ஆண்டில் குண்­டுத்­தாக்­குதல் நடத்­தி­யமை தொடர்பில் குற்­ற­வா­ளி­க­ளாக காணப்­பட்ட நால்­வ­ருக்கு தலா 240 வரு­ட­கால சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

1999: நெதர்­லாந்தின் ஹேக் நக­ரி­லுள்ள சர்­வ­தேச குற்­ற­வியல் நீதி­மன்­றத்தில் யூகோஸ்­லா­விய முன்னாள் ஜனா­தி­பதி சொல­போடன் மிலோ­சோவிக் மற்றும் நால்வர் மீது போர்க் குற்­றச்­சாட்டு சுமத்­தப்­பட்­டது.

2000 : 22 வருட முற்­று­கைக்குப் பின்னர் இஸ்­ரே­லியப் படை­யினர் லெப­னானில் இருந்து வெளி­யே­றினர்.

2000 : கொழும்பில் நோர்வே தூத­ரகம் மீது குண்டு வீசப்­பட்­டது.

2001 : எவரெஸ்ட் சிக­ரத்தை 16 வய­தான டெம்பா ஷேரி எட்­டினார். அச்­சி­க­ரத்தின் உச்­சியை எட்­டிய வயதில் குறைந்­தவர் இவரே.

2002 : ரஷ்­யாவும் ஐக்­கிய அமெ­ரிக்­காவும் மொஸ்கோ உடன்­பாட்டில் கையெ­ழுத்­திட்­டன.

2007 : யாழ்ப்­பா­ணத்தின் நெடுந்­தீவில் இலங்கைக் கடற்படைத்தளத்தைக் கடற்புலிகள் தாக்கி அழித்தனர்.

2014: துருக்கி, கிறீஸ் நாடுகளுக்கு இடையிலான ஏஜியன் கடலில் ஏற்பட்ட பூகம்பத்தினால் 324 பேர் உயிரிழந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!