வாகன விபத்தில் மூவர் பலி!

0 230

ஆனமடுவ – சிலாபம் வீதியில் நாகவில பிரதேசத்தில் நேற்று(25) இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாக பல்லம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளொன்றும் கெப்பொன்றும் மோதிக்கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி மோட்டார் சைக்கிளில் மூன்று பேர் பயணித்துள்ள நிலையில்,  விபத்தில் அவர்கள் மூவரும் பலத்த காயமடைந்த நிலையில் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளையில் உயிரிழந்துள்ளனர்.

ஆடிகம பிரதேசத்தைச் சேர்ந்த 18 மற்றும் 20 வயதான மூவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கெப் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில் பல்லம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!