ஜேர்மனிய யூதர்கள் கிப்பா தொப்பி அணிய வேண்டாம் என அறிவுறுத்தல்

Jews warned against wearing kippah in Germany

0 488

ஜேர்மனியிலுள்ள யூதர்கள் பொது இடங்களில் நடமாடும்போது தமது பாரம்பரிய தொப்பியை அணிந்திருக்க வேண்டாம் என ஜேர்மனிய அந்நாட்டு அரசின் யூத எதிர்ப்பு விவகார ஆணையாளர் அறிவுறுத்தியுள்ளார்.

ஜேர்மனியில் யூதர்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்திருப்பதே இதற்கான காரணம்.

யூத ஆண்கள் ‘எனும் தொப்பியை அணிவது வழக்கமாகும். இந்நிலையில், ஜேர்மனியில் யூதர்களுக்கு எதிரான வன்முறைகள் அண்மைக்காலங்களில் அதிகரித்திருப்பதையடுத்து ஜேர்மனியின் யூத எதிர்ப்பு விவகால ஆணையாளர் பீலிக்ஸ் கான் கூறியுள்ளார்.

‘யூதர்கள் ஜேர்மனியின் எல்லா இடங்களிலும், எல்லா வேளைகளிலும் ஸ்குல்கெப் தொப்பி அணிந்திருப்பதை தன்னால் பரி;ந்துரைக்க முடியாது என அவர் கூறியுள்ளார்.

ஜேர்மனியில் யூதர்களுக்கு எதிரான 1646 வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியிருந்தன. இது 2017 ஆம் ஆண்டை விட 10 சதவீதம் அதிகமாகும் என புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!