டாக்டர் ஷியாப்தீன் முஹம்மட் ஷாபி மேற்கொண்ட சத்திர சிகிச்சைகள் தொடர்பில் விசாரணை!

0 750

குருணாகல் வைத்தியசாலையின் டாக்டர் ஷியாப்தீன் முஹம்மட் ஷாபி தொடர்பில், அவரால் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் பலர் அவருக்கு எதிராக முறைப்பாடுகள் செயய்ப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.

சந்தேகக்கிடமான சத்தர சிகிச்சைகளை மேற்கொண்டார் என்ற குற்றச்சாட்டில் குருணாகல் வைத்தியசாலையின் டாக்டர் ஷியாப்தீன் முஹம்மட் ஷாபி குருணாகல் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பின்னர் குற்றத் தடுப்புப் பிரிவினரிடம் கையளிக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், அவரிடம் சிகிச்சை பெற்றதாகக் கூறப்படும் பல தாய்மார்கள் குருணாகல் வைத்தியசாலை நிர்வாகத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தாமும் குறித்த டாக்டரால் பாதிக்கப்பட்டதாக முறைப்பாடு செய்துள்ளனர்.

இதனையடுத்து, ஷியாப்தீன் முஹம்மட் ஷாபியினால் மேற்கொள்ளப்பட்ட சத்திர சிகிச்சைகள் தொடர்பில் பரிசோதனை மேற்கொண்டு விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக குருணாகல் வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!