பயங்கரவாதி இல்ஹாம் அஹமதுக்குரிய தொழிற்சாலை ஊழியர்கள் குறித்த விசாரணைகள் சிரிஐடியிடம்!

0 489

                                                                                                                                   (எம்.எப்.எம்.பஸீர்)

இல்ஹாம் அகமட்

சினமன் கிராண்ட் ஹோட்டலில் தற்கொலைத் தாக்குதுல் நடத்திய மொஹம்மட் யூசுப் இல்ஹாம் அஹமட்டுக்குச் சொந்தமான குண்டு தயாரிக்கப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் வெல்லம்பிட்டிய செப்புத் தொழிற்சாலையில் சேவையாற்றிய ஊழியர்கள் 8 பேர் தொடர்பிலான விசாரணைகள் பொலிஸ் பயங்கரவாதத் தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

குறித்த 8 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள நிலையிலேயே அந்த விசாரணைகள் வெல்லம்பிட்டி பொலிஸாரிடமிருந்து பயங்கரவாதத் தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

இதேவேளை, பிணையில் உள்ள குறித்த சந்தேக நபர்களை நாளை (27) மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!