இலங்கையிலிருந்து 15 ஐஎஸ் பயங்கரவாதிகள் இந்தியாவுக்கு படகுகளில் புறப்பட்டுள்ளதாக இந்திய புலனாய்வுப் பிரிவினர் அறிக்கை!

0 661

ஐ.எஸ். தீவிரவாதிகள் பலர் இலங்கையிலிருந்து இந்தியாவின் லட்சத்தீவு நோக்கி படகுகளில் புறப்பட்டுச் சென்றுள்ளதாக இந்தியாவின் புலனாய்வுத் தகவல்கள் கிடைத்ததையடுத்து, கேரள பிராந்தியத்தின் கடலோர பகுதிகளில் பொலிஸார் பாதுகாப்புகளை பலப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஐ.எஸ். புயங்கரவாதிகள் சுமார் 15 பேர் இலங்கையிலிருந்து படகு மூலமாக இந்தியாவின் மேற்கு திசையில் அமைந்துள்ள லட்சத்தீவுகளை நோக்கி புறப்பட்டுள்ளதாக இந்திய புலனாய்வுத் தகவல்களில் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக புலனாய்வு வட்டாரங்கள் கூறியதாக இந்தியாவின் பி.ரி.ஐ. செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

இப்புலனாய்வுத் தகவல்கள் காரணமாக, பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இந்திய பொலிஸ் திணைக்கள வட்டாரமொன்று தெரிவித்ததாக பி.ரி.ஐ. செய்தி வெளியிட்டுள்ளது.
(விபரமான செய்தி நாளைய (27) மெட்ரோ நியூஸில்)

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!