சுனாமி கிராம வீடு ஒன்றில் பதுங்கு குழி கண்டுபிடிப்பு!

0 749

                                                                   (களுத்துறை என் ஜெயரட்னம்)
களுத்துறை மாவட்டத்தின் வெலிப்பென்னை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசங்களில் (250 இராணுவம், விசேட அதிரடிப் படை மற்றும் பொலிஸார் இணைந்து நடத்திய சோதனை நடவடிக்கைகளின் போது வெலிப்பென்னை நாலாம் கட்டை, குருந்த, சுனாமி கிராமத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வீட்டின் நிலத்தடியில் பதுங்குகுழி (பங்கர்) ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சிங்கள, தமிழ் முஸ்லிம் மக்கள் செறிந்து வாழும் வெலிப்பென்னை நகரம் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் உட்பட்ட பல்வேறு பாதாள உலக செயற்பாடுகள் இடம்பெறும் நாலாம் கட்டை மற்றும் போந்துபிட்டிய பகுதிகளில் நடத்திய விசேட சோதனை நடவடிக்கைகளின் போதே மேற்படி பதுங்குகுழி கண்டுபிடிக்கப்பட்டது

மேற்படி பதுங்குகுழியுடன் கூடிய வீட்டு உரிமையாளர் இதற்கு முன்னர் பாதாள உலக சம்பந்தப்பட்ட பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர் என்பதும் நீதிமன்றத்தால் குற்றவாளியாககு் காணப்பட்டு தண்டனை அனுபவித்தவர் என்பதும் வேறு பாதாள உலக குழுக்கள் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இந்த இடத்தில் பல்வேறு சந்தர்ப்பங்களில் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களும் இடம்பெற்று இருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

நன்கு இட வசதியுடன் கூடிய இப் பதுங்குகுழியில் சுவாசம் செய்வதற்கான ஒக்சிசனையும் பெற்றுக் கொள்ள கூடிய வகையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.ஏதேனும் தாக்குதல் அல்லது துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் இடம்பெறுபோது பெண்கள் மற்றும் பிள்ளைகளின் பாதுகாப்பு கருதி மறைந்து கொள்டவதற்காக இப்பதுங்குகுழி நிர்மாணிக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுவதுடன் வேறு ஏதேனும் நாசகார செயல்களுக்கு பயன்படுத்தப்பட்ட என்பது தொடர்பில் வெலிப்பென்னை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இதுதவிர, இப்பிரதேசத்தில் நடத்திய தேடுதலில் கூரிய கத்திகள், வாகன இலக்கத் தகடுகள் சிலவற்றையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.களுத்துறை பொலிஸ் வலய பொலிஸ் அத்தியட்சகர் உப்புல் நில்மி ஆரியரத்ன மற்றும் மத்துகமை முதலாம் பொலிஸ் பிரிவு பொலிஸ் அத்தியட்சகர் சஞ்சய இரசிங்கவின் நேரடி கண்காணிப்பில் நடைபெற்ற இச்சோதனை நடவடிக்கைகளின் போது சுமார் 400க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படை வீரர்கள் பங்கேற்றிருந்தனர்

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!