வரலாற்றில் இன்று மே 27: 2006 -இந்தோனேஷிய பூகம்பத்தினால் சுமார் 6000 பேர் பலி

0 95

1703: ரஷ்­யாவின் சென் பீட்­டர்ஸ்பேர்க் நகரம் ஸ்தாபிக்­கப்­பட்­டது.

1883: ரஷ்ய மன்­ன­ராக 3 ஆம் அலெக்­ஸாண்டர் பத­வி­யேற்றார்.

1907: அமெ­ரிக்­காவின் சான்­பி­ரான்­ஸிஸ்கோ நகரில் கொள்ளை நோய் பர­வி­யது.

1916: உலக சமா­தா­னத்தை நிலை நிறுத்­து­வ­தற்­காக ஒரு அமைப்பை ஸ்தாபிக்க வேண்­டு­மென அமெ­ரிக்க ஜனா­தி­பதி உட்ரோ வில்சன் வலி­யு­றுத்­தினார்.

1930: நியூயோர்க் நகரில் 1056 அடி உய­ர­மான கிறிஸ்லர் கட்­ட­டிடம் திறக்­கப்­பட்­டது. அப்­போது உலகின் மிக உய­ர­மான கட்­ட­டி­மாக அது விளங்­கி­யது.

1940: 2 ஆம் உலக யுத்­தத்­தின்­போது ஜேர்மன் படை­யி­ன­ரிடம் சர­ண­டைந்த 99 பிரித்­தா­னிய படை­யினர் கொல்­லப்­பட்­டனர்.

1941: அமெ­ரிக்­காவில் வரை­ய­றை­யற்ற அவ­ச­ர­கால நிலையை அந்­நாட்டு ஜனா­தி­பதி பிராங்ளின் டி ரூஸ்வெல்ட் பிர­க­ட­னப்­ப­டுத்­தினார்.

1941: ஜேர்மன் யுத்தக் கப்­ப­லான பிஸ்மார்க் வட அத்­தி­லாந்திக் சமுத்­தி­ரத்தில் மூழ்­க­டிக்­கப்­பட்­டது. இதனால் 2100 ஜேர்மன் படை­யினர் உயி­ரி­ழந்­தனர்.

1960: துருக்­கிய ஜனா­தி­பதி செலால் பெயார், இரா­ணுவப் புரட்­சியின் மூலம் பத­வி­யி­லி­ருந்து அகற்­றப்­பட்டார்.

1964: இந்­திய பிர­தமர் ஜவ­ஹர்லால் நேரு கால­மானார்.

1971: மேற்கு ஜேர்­ம­னியில் இடம்­பெற்ற ரயில் விபத்தில் 46 பேர் உயி­ரி­ழந்­தனர்.

1980: தென்­கொ­ரி­யாவில் கிளர்ச்­சி­யா­ளர்கள் வச­மி­ருந்த குவாங்ஜூ நகர் தென்­கொ­ரிய படை­யினரால் கைப்­பற்­றப்­பட்­டது. இதன்­போது சுமார் 207 பொது­மக்கள் கொல்­லப்­பட்­ட­தாக மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

1990: பர்­மாவில் நடை­பெற்ற நாடா­ளு­மன்றத் தேர்­தல்­களில் ஜன­நா­யகக் கட்­சிகள் வெற்றி பெற்­றன.

1995: சுப்­பர்மேன் திரைப்­ப­டங்­களில் நடித்து புகழ்­பெற்ற, நடிகர் கிறிஸ்­டோபர் றீவ், குதி­ரை­யோட்டப் போட்­டி­யொன்­றின்­போது வீழ்ந்­ததால் பக்­க­வா­தத்­திற்­குள்­ளானார்.

1997: அமெ­ரிக்க ஜனா­தி­பதி பில் கிளின்­ட­னுக்கு எதி­ரான பாலியல் குற்­றச்­சாட்டு தொடர்­பாக அவர் ஜனா­தி­பதி பத­வி­யி­லி­ருக்கும் போதிலும், பௌலா ஜோன்ஸ் எனும் பெண் வழக்குத் தொடர முடியும் என அமெ­ரிக்க உயர் நீதி­மன்றம் தீர்ப்­ப­ளித்­தது.

2001: பிலிப்­பைன்ஸில் கிளர்ச்சிக் குழு­வொன்­றினால் 20 பேர் பணயக் கைதி­க­ளாக்­கப்­பட்­டனர்.

2006: இந்தோனேஷியாவில் ஏற்பட்ட பூகம்பத்தினால் சுமார் 6000 பேர் பலியாகினர்.

2009: பாகிஸ்தானின் லாகூர் நகரில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளால் 35 பேர் பலியானதுடன் மேலும் 250 பேர் காயமடைந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!