வரலாற்றில் இன்று மே 28: 1998- பாகிஸ்தான் அணுகுண்டு சோதனை செய்தது

0 240

கி.மு. 585: கிறேக்க தத்­து­வ­ஞா­னியும் விஞ்­ஞா­னி­யு­மான தாலெஸ் எதிர்­வு­
கூ­றி­ய­படி, சூரிய கிர­கணம் ஏற்­பட்­டது. லிடியா (தற்­போ­தைய துருக்­கியின் பகுதி) மன்னன் அலி­யாட்­ஸூக்கும் தற்­போ­தைய ஈரானின் மெடியா பகு­திக்கும் இடை­யி­லான போர் நடை­பெற்­றுக்­கொண்­டி­ருக்­கும்­போது திடீ­ரென பகலில் இருள் சூழ்ந்­ததால் அப­ச­குணம் என எண்ணி இரு தரப்­பி­னரும் 5 ஆண்­டு­கால போரை நிறுத்தி சமா­தான உடன்­ப­டிக்கை செய்­து­கொண்­டனர்.

1830: சுதேச அமெ­ரிக்­கர்­களை வேறி­டங்­க­ளுக்கு மாற்­று­வ­தற்­கான சட்­டத்தில் அமெ­ரிக்க ஜனா­தி­பதி அன்ட்ரூ ஜக்ஸன் கையெ­ழுத்­திட்டார்.

1918: அஸர்­பை­ஜானும் ஆர்­மே­னி­யாவும் சுதந்­திரப் பிர­க­டனம் செய்­தன.

1937: ஜேர்­ம­னிய வாகனத் தயா­ரிப்பு நிறு­வ­ன­மான வொக்ஸ் வெகன் ஸ்தாபிக்­கப்­பட்­டது.

1940: ஜேர்­ம­னி­யிடம் பெல்­ஜியம் சர­ண­டைந்­தது.

1952: கிறீஸில் பெண்­க­ளுக்கு வாக்­கு­ரிமை அளிக்­கப்­பட்­டது.

1964: பலஸ்­தீன விடு­தலை இயக்கம் ஸ்தாபிக்­கப்­பட்­டது.

1975: மேற்கு ஆபி­ரிக்­காவின் நாடுகள் இணைந்து மேற்கு ஆபி­ரிக்க பொரு­ளா­தார சமூகம் எனும் அமைப்பை ஸ்தாபிப்பதற்­கான உடன்­ப­டிக்­கையில் கையெ­ழுத்­திட்­டன.

1977: அமெ­ரிக்­காவின் கென்­டக்கி மாநி­லத்தில் விடு­தி­யொன்றில் ஏற்­பட்ட தீ விபத்­தினால் 165 பேர் உயி­ரி­ழந்­தனர்.

1987: மேற்கு ஜேர்­மனைச் சேர்ந்த 19 வய­தான விமா­னி­யொ­ருவர் சோவியத் வான் பாது­காப்பு ஏற்­பா­டு­களை மீறிச் சென்று பிரத்­தி­யேக விமா­ன­மொன்றை சோவியத் யூனியனில் தரை­யி­றக்­கி­யமை சர்ச்­சையை ஏற்­ப­டுத்­தி­யது.

1988: இந்­தோ­னே­ஷி­யாவில் இடம்­பெற்ற படகு விபத்தில் சுமார் 200 பேர் உயி­ரி­ழந்­தனர்.

1991: எத்­தி­யோப்­பி­யாவின் தலை­நகர் அடிஸ் அபாபா, கிளர்ச்­சி­யா­ளர்­க­ளிடம் வீழ்ந்­தது.

1995: ரஷ்­யாவின் நெப்­டேகோர்ஸ்க் நகரில் 7.6 ரிச்டர் அள­வி­லான பூகம்பம் ஏற்­பட்­டதால் சுமார் 2000 பேர் உயி­ரி­ழந்­தனர்.

1998: இந்­தி­யாவின் அணு­குண்டு பரி­சோ­த­னை­க­ளுக்கு பதி­ல­டி­யாக பாகிஸ்தான் 5 அணு­குண்­டு­களை வெடிக்­க­வைத்து பரி­சோ­தித்­தது. இதனால் பாகிஸ்தான் மீது அமெ­ரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகள் பொரு­ளா­தார தடை விதித்­தன.

2002: மேற்கு நாடு­களின் கூட்­ட­ணியில் ரஷ்யா மட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட ஓர் பங்­காளி என நேட்டோ பிர­க­டனம் செய்­தது.

2002: செவ்வாய் கிர­கத்தில் பாரிய பனிப் படி­வுகள் இருந்­த­மைக்­கான ஆதா­ரத்தை மார்ஸ் ஒடிஸி எனும் விண்­கலம் கண்­ட­றிந்­தது.

2004: ஈராக்கின் இடைக்­கால அர­சாங்கத்தின் பிரதமராக அயாத் அல்லாவி தெரிவுசெய்யப்பட்டார்.

2008: நேபாளத்தில் மன்னராட்சி ஒழிக்கப்பட்டு நேபாளம் குடியரசனாதாக அந்நாட்டு அரசியலமைப்புச் சபை பிரகடனம் செய்தது.

2010: இந்தியாவில் இடம்பெற்ற ரயில் விபத்தில் 141 பேர் உயிரிழந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!