வீனஸை வீழ்த்தினார் ஸ்வேட்டோலினா: கிவிட்டோவா உபாதை காரணமாக வாபஸ்; ஆடவர் பிரிவில் பெடரருக்கு இலகு வெற்றி

0 174

ரோலண்ட் கெரொஸ் டென்னிஸ் அரங்கில் நடை­பெற்­று­வரும் பிரெஞ்சு பகி­ரங்க டென்னிஸ் போட்­டி­களின் பெண்கள் ஒற்­றையர் பிரிவில் ஆரம்ப நாளான ஞாயி­றன்று ஏஞ்­சலிக் கேர்­பரைத் தொடர்ந்து மற்­றொரு பிர­பல வீராங்­க­னை­யான வீனஸ் வில்­லிம்ஸும் முதல் சுற்­றுடன் தோல்வி அடைந்து வெளி­யே­றினார்.

எலினா ஸ்விட்­டோ­லி­னா­

 

யூக்ரெய்ன் வீராங்­கனை எலினா ஸ்விட்­டோ­லி­னா­வு­ட­னான முதல் சற்றுப் போட்­டியில் இரண்டு நேர் செட்­களில் வீனஸ் வில்­லியம்ஸ் தோல்வி அடைந்தார். இப் போட்­டியின் இரண்டு செட்­க­ளிலும் தலா 6 – 3 என்ற புள்­ளிகள் அடிப்­ப­டையில் எலினா ஸ்விட்­டோ­லினா வெற்­றி­பெற்றார்.

மற்­றொரு பெண்கள் ஒற்­றையர் போட்­டியில் ஐக்­கிய அமெ­ரிக்க வீராங்­கனை டெய்லர் டவுன்­செண்­டிடம் கடும் சவாலை எதிர்­கொண்ட ஸ்பெய்ன் வீராங்­கனை கார்பின் முகு­ருஸா 5 – 7, 6 – 2, 6 – 2 என்ற புள்­ளி­களைக் கொண்ட 2 – 1 என்ற செட்கள் அடிப்­ப­டையில் வெற்­றி­பெற்றார்.

வீனஸ் வில்­லியம்ஸ்

 

மேலும் ஒரு போட்­டியில் மற்­றொரு ஐக்­கிய அமெ­ரிக்க வீராங்­க­னை­யான மெடிசன் ப்ரெங்க்லை எதிர்த்­தா­டிய செக் குடி­ய­ரசு வீராங்­கனை கெர­லினா ப்ளிஸ்­கோவா 6 – 2, 6 – 3 என்ற இரண்டு நேர் செட்­களில் வெற்­றி­கொண்டார்.

பெடரர் வெற்றி
ஆடவர் ஒற்­றையர் பிரிவில் இத்­தா­லியின் லொரென்சோ சொனே­கோவை எதிர்த்­தா­டிய சுவிட்­சர்­லாந்தின் ரொஜர் பெடரர் 3 நேர் செட்­களில் (6 – 2, 6 – 4, 6 – 4)வெற்­றி­பெற்றார்.

பிரெஷ்சு பகி­ரங்க டென் னிஸ் போட்­டி­களில் 2009இல் மாத்­தி­ரமே சம்­பி­ய­னான ரொஜர் பெடரர் மொத்­த­மாக 20 மாபெரும் டென்னிஸ் பட்­டங்­களை வென்­றுள்ளார்.

கிவிட்­டோவா வாபஸ்

கிவிட்­டோவா வாபஸ்
விம்­பிள்­டனில் இரண்டு தட­வைகள் சம்­பி­ய­னான செக் குடி­ய­ரசின் பெட்ரா கிவிட்­டோவா உபாதை கார­ண­மாக பிரெஞ்சு பகி­ரங்க டென்னிஸ் போட்­டி­களின் முதல் சுற்­றுடன் வாபஸ் பெற்­றுக்­கொண்­டுள்ளார்.

மகளிர் டென்னிஸ் தர­வ­ரி­சையில் 84ஆவது இடத்­தி­லுள்ள ருமே­னி­யாவின் சொரணா சேர்ஸ்­டி­யாவை கிவிட்­டோவா நேற்­றுக்­காலை எதிர்த்­தா­ட­வி­ருந்தார்.

ஆனால் பின்னங்கால் பகு தியில் ஏற்பட்ட தசை இழுப்பு காரணமாக அவர் வாபஸ் பெற்றுக்கொண்டார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!