இந்­தி­யாவில் கைவி­டப்­பட்ட 1800 மாடு­களை பரா­ம­ரிக்கும் ஜேர்­ம­னியப் பெண்

0 305

ஜேர்­ம­னியைச் சேர்ந்த பெண்­ணொ­ருவர் இந்­தி­யாவிலேயே 1800 மாடு­களைப் பரா­ம­ரித்து வரு­கிறார். 61 வய­தான பிரெட்ரிக் ஐரினா புரூனிங் எனும் இப்பெண் கைவி­டப்­பட்ட மற்றும் நோயுற்ற மாடு­களை பரா­ம­ரித்து வரு­கிறார். மதுரா நக­ருக்கு அருகில் இப்­ப­ரா­ம­ரிப்பு நிலையம் உள்­ளது.

1800 மாடுகள் அங்கு பரா­ம­ரிக்­கப்­ப­டு­வ­துடன், தினமும் 5 முதல் 15 மாடுகள் அங்­கு கொண்­டு­வ­ரப்­ப­டு­கின்­றன. 25 வரு­டங்­க­ளுக்கு முன்னர் ஐரினா புரூனிங் இந்­தி­யா­வுக்குச் சென்றார். அதன்பின் கைவி­டப்­பட்ட மாடு­களை பரா­ம­ரிப்­ப­தற்­காக தனது சொந்தப் பணத்­தி­லி­ருந்தும் 225,000 டொலர்­களை (சுமார் 4 கோடி இலங்கை ரூபா) அவர் செல­விட்­டுள்­ளாராம்.

இப்­ப­ரா­ம­ரிப்பு நிலை­யத்­துக்கு மாதாந்தம் 45,000 டொலர்கள் தேவைப்­ப­டு­கின்­றன. இப்­ப­ரா­ம­ரிப்பு நிலை­யத்­துக்கு பெரும்­பாலும் பார்­வை­யற்ற நிலையில் வீதி விபத்­து­களில் காய­ம­டைந்த மாடு­களே கொண்டு வரப்­ப­டு­வ­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. மேலும் பல மாடுகள் பிளாஸ்டிக் கழி­வு­களை உட்­கொண்­டதால் நோயுற்­ற­வை­யாகும்.

பிரெட்ரிக் ஐரினா புரூ­னிங்­குக்கு இந்­திய அர­சினால் பத்­மஸ்ரீ விருதும் வழங்­கப்­பட்­டது.  எனினும், அண்­மையில் அவரின் விசா நீடிப்புக் கோரிக்­கைக்கு மறுப்புத் தெரி­விக்­கப்­பட்­டது.  அதை­ய­டுத்து, தனது விசா நீடிக்­கப்­ப­டா­விட்டால் பத்­மஸ்ரீ விருதை திருப்பிக் கொடுக்­கப்­போ­வ­தா­கவும் ஐரினா புரூனிங் கூறினார்.

அதன்பின், இவ்­வி­டயம் தொடர்­பாக தான் அறிக்­கை­யொன்றை கோரி­யுள்­ள­தாக இந்­திய வெளி­வி­வ­கார அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் டுவிட்­டரில் தெரிவித்தார். இந்நிலையில், பிரெட்ரிக் ஐரினா புரூனிங் தொடர்ந்தும் இந்தியாவில் தங்கியிருப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!