வரலாற்றில் இன்று மே 29: 1953 ஹிலாரி, டென்ஸிங் ஆகியோர் எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்தனர்

0 117

1328: பிரான்ஸின் மன்­ன­ராக 6 ஆம் பிலிப் முடி­சூ­டப்­பட்டார்

1733: கன­டாவின் கியூபெக் நகரில் செவ்­விந்­திய அடி­மை­களை கனே­டி­யர்கள் வைத்­தி­ருப்­ப­தற்­கான உரிமை அங்­கீ­க­ரிக்­கப்­பட்­டது.

1798: அயர்­லாந்தில் கிளர்ச்­சியில் ஈடு­பட்ட 300 இற்கு மேற்­பட்ட அயர்­லாந்து பிர­ஜைகள் பிரித்­தா­னிய படை­யி­னரால் கொல்­லப்­பட்­டனர்.

1864: மெக்­ஸிகோ மன்­ன­ராக தெரி­வு­செய்­யப்­பட்ட ஆஸ்­தி­ரி­யாவைச் சேர்ந்த முதலாம் மெக்­ஸி­மி­லியன் முதல் தட­வை­யாக மெக்­ஸி­கோ­வுக்குச் சென்றார்.

1914: கன­டாவின் ஆர்.எம்ஸ். எம்ப்ரெஸ் ஒவ் அயர்லாண்ட் எனும் பய­ணிகள் கப்பல் கன­டாவின் சென் லோரன்ஸ் வளை­கு­டாவில் மற்­றொரு கப்­ப­லுடன் மோதி­யதால் மூழ்­கி­யது. இதனால் 1024 பேர் உயி­ரி­ழந்­தனர்.

1919;: அல்பர்ட் ஐன்ஸ்­டீனின் சார்­பியல் கோட்­பாடு ஆர்தர் எடிங்டன் மற்றும் அன்ட்ரூ குரோ­மலின் ஆகி­யோ­ரினால் பரீட்­சிக்­கப்­பட்­டது.

1931: இத்­தா­லிய சர்­வா­தி­காரி முஸோ­லி­னியை கொல்ல முயன்ற குற்­றச்­சாட்­டுக்­காக அமெ­ரிக்க பிரஜை மிஸெல் ஷிச்­சிரு இத்­தா­லிய படை­யி­னரால் கொல்­லப்­பட்டார்.

1953: நியூஸிலாந்தைச் சேர்ந்த எட்மன்ட் ஹிலாரி, நேபா­ளத்தைச் சேர்ந்த டென்ஸிங் நோர்கே ஆகியோர் எவரெஸ்ட் சிக­ரத்தின் உச்­சியை முதன் முதலில் அடைந்து சாதனை படைத்­தனர்.

1964: பலஸ்­தீன விவ­காரம் குறித்து ஆராய்­வ­தற்­காக அரபு லீக் அமைப்பின் கூட்டம் கிழக்கு ஜெரு­ஸ­லேமில் நடை­பெற்­றது.

1973: அமெ­ரிக்­காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரின் முத­லா­வது கறுப்­பின மேய­ராக டொம் பிராட்லி தெரி­வானார்.

1985: பெல்­ஜி­யத்தின் பிரசல்ஸ் நகரில் நடை­பெற்ற ஐரோப்­பிய கிண்ண கால்­பந்­தாட்ட இறு­திப்­போட்­டி­யின்­போது அரங்கின் சுவ­ரொன்று இடிந்து வீழ்ந்­ததால் 39 பேர் உயி­ரி­ழந்­தனர்.

1988: சோவியத் யூனியன் அதிபர் மிகைல் கொர்­ப­ச்சே­வுடன் கலந்­து­ரை­யா­டு­வ­தற்­காக அமெ­ரிக்க ஜனா­தி­பதி ரொனால்ட் றீகன் முதல் தட­வை­யாக சோவியத் யூனிய­னுக்கு விஜயம் செய்தார்.

1989: எவ்16 போர் விமா­னங்­க­ளுக்­கான பாகங்­களை எகிப்தில் தயா­ரிப்­பது தொடர்­பான உடன்­ப­டிக்­கையில் அமெ­ரிக்­காவும் எகிப்தும் கையெ­ழுத்­திட்­டன.

1990: ரஷ்­யாவின் ஜனா­தி­ப­தி­யாக பொரிஸ் யெல்ட்ஸின் அந்­நாட்டு நாடா­ளு­மன்­றத்­தினால் தெரி­வு­செய்­யப்­பட்டார்.

1999: நைஜீ­ரி­யாவில் 16 வரு­ட ­கால இரா­ணுவ ஆட்­சிக்குப் பின்னர் முத­லா­வது சிவில் ஜனா­தி­ப­தி­யாக ஒலு­செ­லுகன் ஒபா­சஞ்சோ பதவியேற்றார்.

1999: டிஸ்கவரி விண்கலம் முதல் தடவையாக சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைந்தது.

2012: இத்தாலியின் வட பகுதியில் ஏற்பட்ட 5.8 ரிச்டர் அளவிலான பூகம்பத்தினால் 24 பேர் உயிரிழந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!