வரலாற்றில் இன்று மே 30: 2012 லைபீ­ரி­யாவின் முன்னாள் ஜனாதிப­திக்கு 50 வருட சிறைத் ­தண்­டனை

0 101

1574: பிரான்ஸில் 3 ஆம் ஹென்றி மன்­ன­ரானார்.

1631: பிரான்ஸின் முத­லா­வது பத்­தி­ரி­கை­யான “லா கஸெட்” வெளி­வர ஆரம்­பித்­தது.

1814: பிரான்ஸின் எல்­லையை 1814 ஆம் ஆண்­டி­லி­ருந்த நிலைக்கு மாற்­று­வ­தற்­கான உடன்­ப­டிக்கை பிரான்­ஸுக்கும் 6 ஆம் கூட்­டணி நாடு­க­ளுக்கும் இடையில் கையெ­ழுத்­தி­டப்­பட்­டது. கைது செய்­யப்­பட்ட நெப்­போ­லியன் போனபார்ட், அல்பா தீவுக்கு அனுப்­பப்­பட்டார்.

1913: அல்­பே­னியா சுதந்­திர நாடா­கி­யது.

1815: தென் ஆபி­ரிக்­கா­வுக்கு அருகில் சூறா­வ­ளி­யினால் கப்­ப­லொன்று உடைந்­ததால் 372 பேர் உயி­ரி­ழந்­தனர்.

1876: ஒட்­டோமான் சுல்தான் அப்துல் அஸீஸை அவரின் மரு­மகன் 5 ஆம் மூரத் பத­வி­யி­லி­ருந்து அகற்­றி­விட்டு புதிய சுல்­தா­னானார்.

1917: கிறீஸில் முதலாம் அலெக்­ஸாண்டர் மன்­ன­ரானார்.

1942: ஜேர்­ம­னியின் கொலோன் நகரில் பிரிட்­டனின் ஆயிரம் விமா­னங்கள் இணைந்து 90 நிமி­டங்கள் தாக்­குதல் நடத்­தின.

1966: கொங்­கோவின் முன்னாள் பிர­தமர் எவ­ரிஸ்டே கிம்பா உட்­பட அர­சி­யல்­வா­திகள் பலர்; ஜனா­தி­பதி ஜோஸப் மொபுட்­டுவின் உத்­த­ர­வினால் பகி­ரங்­க­மாக கொல்­லப்­பட்­டனர்.

1967: நைஜீ­ரி­யாவின் கிழக்குப் பிராந்­தி­ய­மான பயா­பரா, சுதந்­திரப் பிர­க­டனம் செய்­தது. இதை­ய­டுத்து உள்­நாட்டு யுத்தம் ஆரம்­ப­மா­கி­யது.

1972: இஸ்­ரேலின் டெல் அவிவ் நகர விமான நிலை­யத்தில் ஜப்­பா­னிய செம்­படை கிளர்­ச்சி­யா­ளர்கள் நடத்­திய தாக்­கு­தலில் 24 பேர் பலி­யா­ன­துடன் 78 பேர் காய­ம­டைந்­தனர்.

1974: எயார் பஸ் ஏ300 விமானம் முதல் தட­வை­யாக சேவையில் ஈடு­பட்­டது.

1998: ஆப்­கா­னிஸ்­தானில் 6.6 ரிச்டர் அள­வி­லான பூகம்பம் ஏற்­பட்­டதால் சுமார் 5000 பேர் உயி­ரி­ழந்­தனர்.

1998: பாகிஸ்தான், கரான் பாலை­வ­னத்தில் அணு­குண்டு சோத­னை­யொன்றை நடத்­தி­யது.

2012: சியரா லியோன் சிவில் யுத்­தத்தில் இடம்­பெற்ற மனித குலத்­துக்கு எதி­ரான குற்­றங்­க­ளுக்­காக லைபீ­ரி­யாவின் முன்னாள் ஜனா­தி­பதி சார்ள்ஸ் டெய்லருக்கு ஐ.நா. ஆதரவுடனான சர்வதேச நீதிமன்றம் 50 வருடகால சிறைத்தண்டனை விதித்தது.

2013: ஒரு பாலினத் திருமணங்களுக்கு எதிரான சட்டத்தை நைஜீரியா நிறைவேற்றியது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!