வரலாற்றில் இன்று மே 31: 2017 இலங்கையில் வெள்­ளத்தால் 203 பேர் பலி­யா­ன­தாக அறி­விப்பு

0 337

455: ரோமா­னிய மன்னர் பெட்­ரோ­னியஸ் மெக்­ஸி­மஸை மக்கள் கல்லால் அடித்து கொன்­றனர்.

526: துருக்­கியில் ஏற்­பட்ட பாரிய பூகம்பம் கார­ண­மாக சுமார் 250,000 பேர் உயி­ரி­ழந்­தனர்.

1790: அமெ­ரிக்­காவில் பதிப்­பு­ரிமை சட்டம் அங்­கீ­கரிக்­கப்­பட்­டது.

1859: லண்டன் பிக் பென் கடி­காரம் நேரத்தை காண்­பிக்க ஆரம்­பித்­தது.

1889: அமெ­ரிக்­காவின் பென்­சில்­வே­னியா மாநிலத்தின் ஜோன்ஸ்­டவுன் நகரில் அணைக்­கட்­டொன்று உடைந்­ததால் சுமார் 2200 பேர் உயி­ரி­ழந்­தனர்.

1910: தென் ஆபி­ரிக்க ஒன்­றியம் ஸ்தாபிக்­கப்­பட்­டது.

1911: மெக்­ஸிகோ புரட்­சி­யின்­போது ஜனா­தி­பதி போர்­பி­ரியோ டயஸ் நாட்­டை­விட்டு தப்­பிச்­சென்றார்.

1927: போர்ட் “மொடல் ரீ” ரகத்தைச் சேர்ந்த கடைசி வாகனம் தொழிற்­சா­லை­யி­லி­ருந்து வெளி­யே­றி­யது.

1929: முத­லா­வது பேசும் கார்ட்­டூ­னான மிக்கி மௌஸ் வெளி­யி­டப்­பட்­டது.

1935: தற்­போ­தைய பாகிஸ்­தானின் குவேட்டா பகு­தியில் 7.7 ரிச்டர் அள­வி­லான பூகம்பம் ஏற்­பட்­டதால் சுமார் 40,000 பேர் உயி­ரி­ழந்­தனர்.

1942: அவுஸ்­தி­ரே­லி­யாவின் சிட்னி நகரில் ஜப்­பா­னிய நீர்­மூழ்­கிகள் கடும் தாக்­கு­தல்­களை மேற்­கொண்­டன.

1961: தென் ஆபி­ரிக்க ஒன்­றி­ய­மா­னது தென் ஆபி­ரிக்க குடி­ய­ர­சா­கி­யது.

1962: மேற்­கிந்­திய சம்­மே­ளனம் கலைக்­கப்­பட்­டது.

1970: பெரு நாட்டில் பூகம்­பத்­தை­ய­டுத்து ஏற்­பட்ட மண்­ச­ரி­வினால் சுமார் 47,000 பேர் உயி­ரி­ழந்­தனர்.

1985: அமெ­ரிக்கா, கன­டாவில் சுழற்­காற்­றினால் சுமார்; 97 பேர் உயி­ரி­ழந்­தனர்.

2004: ஊட­க­வி­ய­லாளர் நடேசன் மட்­டக்­க­ளப்பில் சுட்­டுக்­கொல்­லப்­பட்டார்.

2005: புல­னாய்­வுத்­துறை உயர் அதி­கா­ரி­யான மேஜர் நிசாம் முத்­தலிப் கொழும்பில் சுட்­டுக்­கொல்­லப்­பட்டார்.

2010: காஸா பிராந்­தியம் மீதான இஸ்­ரே­லியத் தடை­களை முறி­ய­டிக்கும் நோக்­குடன் மனி­தா­பி­மானப் பொருட்­களை ஏற்றிச் சென்ற கப்­பல்­களில் இஸ்­ரே­லிய கடற்­ப­டை­யினர் மேற்­கொண்ட முற்­று­கை­க­ளின்­போது 9 சிவி­லி­யன்கள் கொல்­லப்­பட்­டனர்.

2017: ஆப்­கா­னிஸ்தான் தலை­நகர் காபூலில் ஜேர்மன் தூத­ர­கத்­துக்கு அருகில் நடந்த குண்­டு­வெ­டிப்­பினால் 90 பேர் உயிரிழந்ததுடன் 463 பேர் காயமடைந்தனர்.

2017: சில தினங்களாக பெய்த கடும் மழை, வெள்ளம் காரணமாக 203 பேர் பலியானதாகவும் 94 பேர் காணாமல் போனதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்தது,

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!