உலக புகைத்தல் எதிர்ப்பு தினம் இன்று

World No Tobacco Day 2019

0 826

உலக புகைத்தல் எதிர்ப்பு தினம் இன்றாகும். வருடாந்தம் மே 31 ஆம் திகதி உலக புகைத்தல் எதிர்ப்பு தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.

உலக சுகாதார நிறுவனத்தின் கீழ் செயற்படும் உலக சுகாதார அவையானது வருடாந்தம் மே 31 ஆம் திகதியை உலக புகைத்தல் எதிர்ப்புத் தினமாக அனுஷ்டிக்குமாறு கோரும் WHA42.19   ஆம் இலக்க தீர்மானத்தை நிறைவேற்றியது.

புகையிலை சார் பொருட்களின் பாவனையினால் ஏற்படும் ஆரோக்கிய பாதிப்புகளை வெளிப்படுத்தல் மற்றும் புகையிலை பாவனையை குறைப்பதற்கான வினைத்திறனான கொள் கைகளை வகுப்பதை வலியுறுத்துவதும் வகையில் உலக சுகாதார நிறுவனம்; உலகளாவிய ரீதியில் புகைத்தல் எதிர்ப்பு பிரசாரங்களை நடத்துகிறது.

2018 ஆம் ஆண்டின் உலக புகைத்தல் எதிர்ப்புத் தின பிரசாரங்களில் புகைத்தல் மற்றும் இதய நோய்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படுகிறது

புகையிலைப் புகையானது சுமார் 7000 இரசாயனங்களைக் கொண்டிருக்கிறது எனத் தெரிவிக்கப்படுகிறது.

புகையில்லாத புகையிலையும் பாதிப்புகளை ஏற்படுத்தும் இத்தகைய புகையிலையில் நிக்கோட்டின் உட்பட 2000 இரசாயனங்கள் உள்ளன என்கிறது உலக சுகாதார நிறுவனம்.

நேரடியாக புகைத்தலில் ஈடுபடுவர்களுக்கு மாத்திரமல்லாமல் அவர்களுக்கு அருகிலிருக்க நேரிடுவதால் மறைமுகமாக புகையை உள்வாங்குபவர்களுக்கும் கடும் ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்படுகின்றன. இது ‘செக்கன்ட் ஹேன்ட் ஸ்மோக்கிங’; (secondhand smoking)  என குறிப்பிடப்படுகிறது.

‘செக்கன்ட் ஹேன்ட் ஸ்மோக்கிங’ எனும் மறைமுகமான புகைத்தலும் இதய நோய்;, புற்றுநோய் மற்றும் ஏனைய நோய்களுக்கு காரணமாகிறது.

வருடாந்தம் 70 லட்சம் பேர் புகைத்தலினால் உயிரிழக்கின்றனர் என உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது. அதாவது தினமும் 19000 பேர் புகைத்தலால் இறக்கின்றனர்.

இவர்களில் வருடாந்தம் 6 லட்சம் பேர் நேரடியான புகைத்தலினால் இறக்கின்றனர். 89000 பேர் மறைமுக புகைத்தல் காரணமாக இறக்கின்றனர்.

புகைத்தல் தொடர்பான அதிக மரணங்கள் குறைந்த வருமானமுடைய அல்லது நடுத்தர வருமானமுடைய நாடுகளிலேயே இடம்பெறுவதாகவும் உலக சுகதார நிறுவனம் தெரிவிக்கிறது.

புகைத்தலினால் ஏற்படும் ஆரோக்கியப் பாதிப்புகள் குறித்து பலர் அறிவதில்லை. அதேவேளை சிலர் புகைத்தல் பழக்கத்தை கைவிட முடியாமல் சிரமப்படுகின்றனர்.

மனதில் உறுதியுடன் ஒருவர் தானே நினைத்துப் புகைப்பதை நிறுத்துவதே 100 வீதமான வெற்றியைத் தரும். படிப்படியாக ஒருவர் புகைப்பதை நிறுத்துவதாகக் கூறி பின் மீண்டும் பழைய நிலைக்கு வரக் கூடிய சாத்தியங்கள் உண்டு. எனவே இனிப் புகைப்பதில்லை என்ற முடிவை உறுதியாக எடுத்து உடன் நிறுத்துவதே சிறந்த வழியாகும்.

ஜேர்மனியின் பிறைபேக் பல்கலைக்கழகப் பேராசிரியர் கலாநிதி யோர்கன் ட்ரொஸ்கே தனது ஆராய்ச்சியின்படி, 80 தொடக்கம் 90 விதமானோர் புகைத்தலை உடனடியாகக் கைவிட்டு வெற்றியடைந்துள்ளனர் எனத் தெரிவித்துள்ளர்ர்.

2019 ஆம் ஆண்டின் உலக புகைத்தல் எதிர்ப்புத் தினத்தில், ‘புகையிலை மற்றும் நுரையீல் ஆரேக்கியம்’  (tobacco and lung health) குறித்து கவனம் செலுத்தப்படுவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. மனிதர்களின் நுரையீரல் ஆரோக்கியத்துக்குப் புகைத்தலினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பரப்புரைகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!