சினிமாவுக்காக பல்கலைக்கழக வாய்ப்பை புறக்கணித்த ‘ஸ்டுடன்ட் ஒவ் த இயர் 2’ திரைப்பட நடிகை அனன்யா

0 175

சினி­மாவில் நடிப்­ப­தற்­காக, பல்­க­லைக்­க­ழகம் செல்லும் வாய்ப்பை நடிகை அனன்யா பாண்டே புறக்­க­ணித்தார் என அவரின் தந்தை தெரி­வித்­துள்ளார்.

20 வய­தான நடிகை அனன்யா பாண்டே, நடிகர் சன்கி பாண்­டேயின் மக­ளாவார்.

இவர் அண்­மையில் வெளியான ஸ்டூடன்ட் ஒவ் தி இயர் 2 திரைப்­ப­டத்தின் மூலம் பொலிவூட் நடி­கை­யாக அறி­மு­க­மா­னவர் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

அமெ­ரிக்கப் பல்­க­லைக்­க­ழ­கங்­களில் தனக்கு அனு­ம­தி­கி­டைத்த போதிலும் திரைப்­ப­டங்­களில் நடிப்­ப­தற்­காக பல்­க­லைக்­க­ழகம் செல்­வதை தான் தவிர்த்­த­தாக அனன்யா பாண்டே தெரி­வித்­தி­ருந்தார்.

தென் கரோ­லினா பல்­க­லைக்­க­ழ­கத்தில் கல்வி கற்­ப­தற்குச் செல்­வ­தற்கு நான் தயா­ராகிக் கொண்­டி­ருந்தேன்.

அப்­போது திரைப்­ப­டத்தில் நடிக்க வாய்ப்பு வந்­தது. அந்த வாய்ப்பை பயன்­ப­டுத்­திக்­கொண்டேன்.

இதனால் சினி­மாவில் நடிக்கும் எனது கனவு நன­வா­கி­யது என அனன்யா பாண்டே கூறினார்.

ஆனால், பல்­க­லைக்­க­ழக அனு­மதி தொடர்­பாக அனன்யா பாண்டே பொய் கூறு­கிறார் என அவரின் பாட­சாலை சகாக்கள் எனக் கூறிக்­கொள்ளும் யுவ­திகள் சிலர் சமூக வலைத்­த­ளங்­களில் தெரி­வித்­தி­ருந்­தனர்.

தந்தையடன் அனன்யா

இது குறித்து நடிகர் சன்கி பாண்டே கூறு­கையில், அனன்­யா­வுக்கு பல்­க­லைக்­க­ழ­கங்­களின் அனு­மதி கிடைத்­தமை உண்­மைதான்.

அவர் படிப்பில் சிறந்­தவர். இரு பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளி­லி­ருந்து அவருக்கு அனுமதி கிடைத்தது.

ஆனால் தற்போது அவர் சினிமாவில்தான் கவனம் செலுத்துகிறார் எனக் கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!