தனது இனம் சார்ந்து செயற்படும் ஒருவர் எப்படி முழு மாகாணத்துக்கும் ஆளுநராகச் செயற்பட முடியும்? வியாழேந்திரன் எம்.பி

0 364

                                                                                           (மட்டு.சோபா)
மட்டக்களப்பில் தொடர்ச்சியான முறையில் உண்ணாவிரத போராட்டம் நடாத்தப்படும் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் நேற்றுக் (01) காலை ஆரம்பிக்கப்பட்ட சுழற்சி முறையிலான உண்ணாவிரதத்தை நேற்றிரவு நிறைவு செய்த பின்னர் தமிழ் உணர்வாளர்கள் அமைப்பினால் உண்ணாவிரத போராட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

இந்த நிலையில் கிழக்கு மாகாண ஆளுனர்,மேல்மாகாண ஆளுனர்,அமைச்சர் ரிஷாத் ஆகியோரை பதவி நீக்கும் வரையில் சுழற்சி முறையில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படும் என அவர் தெரிவித்தர்.
இதன்போது கருத்து தெரிவித்த அவர்,கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி மட்டக்களப்பு சீயோன் தேவாலயம் உட்பட கொழும்பின் பல இடங்களில் இஸ்லாமிய தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதல்களால் 250க்கும் மேற்பட்ட அப்பாவி உயிர்கள் பலியாகினர். இன்றுவரை வைத்தியசாலைகளில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவுகளில் பலர் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கின்றனர்.
இந்த மிலேச்சத்தனமான தாக்குதலுடன் தொடர்பிருப்பதாக குற்றஞ்சாட்டப்படுகின்ற அமைச்சர் ரிஷாத் பதியுதீன், கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் தமக்கு வழங்கப்பட்ட பதவிகளிலிருந்து உடனடியாக விலகவேண்டும் என்ற அடிப்படையிலே பல்வேறுபட்ட போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

இலங்கையின் ஒரு சிரேஷ்ட அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்கா நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டுக்காக இரண்டு வருடங்கள் சிறையில் இருக்கவேண்டிய நிலையேற்பட்டது. ஆனால் தீர்ப்பை தனக்கு சாதகமாக்குவதற்காக நீதிபதியையே மாற்றினேன் எனச்சொல்கின்ற இனவாத நோக்குள்ள நீதித்துறையின் சுதந்திரத்தை மீறிய ஒருவரை ஜனாதிபதி ஆளுநராக நியமித்ததனை அன்றிலிருந்து நாங்கள் தொடர்ச்சியாக எதிர்த்துவருகின்றோம்.

கிழக்கு மாகாணாத்தின் ஆளுநராக அவர் நியமிக்கப்பட்ட பின்னரும் இனவாத நோக்குடனேயே செயற்படுகின்றார். அண்மையில் தமிழ் பாடசாலைகளில் கடமையாற்றுகின்ற முஸ்லிம் ஆசிரியர்களை, தமிழ் மாணவர்களின் கல்வியைப் பற்றிக் கவலைப்படாமல் உடனடியாக முஸ்லிம் பாடசாலைகளுக்கு இடமாற்றம் செய்த செயற்பாடானது இனவாதச் செயற்பாடாகும். நான் உடனடியாக ஜனாதிபதியிடம் இதுபற்றி பேசி அவர் ஆளுநருடன் இதுதொடர்பில் பேசி இடமாற்றங்களை ரத்து செய்தார்.

இப்படியாக ஒருபக்கச்சார்பாக தன்னுடைய சமூகம் சார்ந்து இனம் சார்ந்து செயற்படுகின்ற ஒருவர் எப்படி முழு மாகாணத்துக்கும் ஆளுநராகச் செயற்பட முடியும் என்றும் அவர் கேள்வியெழுப்பினார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!