நெய்மார் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக பெண் முறைப்பாடு: பாரிஸ் ஹோட்டலில் சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிப்பு

0 371

பிரேஸிலின் பிரபல கால்பந்தாட்ட நட்சத்திரமான நெய்மார் தன்னை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதாக பெண்ணொருவர் முறைப்பாடு செய்துள்ளார்.

பிரான்ஸின் தலைநகர் பாரிஸிலுள்ள ஹோட்டல் அறையொன்றில் இப்பாலியல் வல்லுறவு இடம்பெற்றதாக பிரேஸிலின் சாவோ பௌலோ நகர பொலிஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பெண்ணின் பெயர் வெளியிடப்படவில்லை.

பிரெஞ்சு கால்பந்தாட்டக் கழகமான பாரிஸ் செயின்ற் ஜேர்மைன் கழகத்திலும் நெய்மார் விளையாடி வருகிறார்.

மேற்படி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்களின்படி, நெய்மாருக்கு மேற்படி பெண் இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமானார்.

அப்பெண் பிரேஸிலிலிருந்து பிரான்ஸுக்கு வருவதற்கு விமானப் பயணச்சீட்டை நெய்மார் வழங்கியதுடன், பாரிஸ் நகரிலுள்ள Hotel Sofitel Paris Arc de Triomphe எனும் ஹோட்டலில் அறையொன்றையும் முன்பதிவு செய்தார்.
கடந்த மே 15 ஆம் திகதி அந்த அறைக்கு நெய்மார் வந்தபோது அவர் மதுபோதையில் இருந்தார் என அப்பெண் தெரிpவத்துள்ளார்.

சில உரையாடல்களின் பின்னர், நெய்மார் வன்முறை ஊடாக ஆக்ரோஷமாக நடந்துகொண்டார். ஆப்பெண்ணின் விருப்பத்துக்கு மாறாக அவருடன் நெய்மார் பாலியல் உறவில் ஈடுபட்டார் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Hotel Sofitel Paris Arc de Triomphe


தான் அதிர்ச்சியடைந்திருந்ததாலும் மற்றொரு நாட்டில் இத்தகவல்களை வெளியிட விரும்பாததாலும் பிரான்ஸ் பொலிஸாரிடம் இது குறித்து தான் முறையிடவில்லை என அப்பெண் கூறியுள்ளர்ர.
2 நாட்களின் பின் பிரேஸிலுக்குத் திரும்பியவுடன் அங்குள்ள பொலிஸாரிடம் தான் முறையிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இக்குற்றச்சாட்டு தொடர்பில் நெய்மார் எதுவும் தெரிவிக்கவில்லை.
எனினும், ‘இது ஒரு பொறி என்பது தெளிவான’ என நெய்மாரின் தந்தை கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!