380 தொன் எடையுள்ள கோதண்டராமர் சிலை பயணம் வெற்றி!

240 டயர் கொண்ட பிரமாண்ட வாகனத்தில் 7 மாத கால பயணம், லொறி வாடகை ரூபா 2 கோடி!

0 201

7 மாத கால பயணம் மற்றும் 2 கோடி ரூபா செலவில் பிர­மாண்ட கோதண்­ட­ராமர் சிலை தமி­ழ­கத்தில் இருந்து பெங்­க­ளூ­ருக்கு வெற்­றி­க­ர­மாகக் கொண்டு செல்­லப்­பட்­டுள்­ளது.

பய­ணங்கள் முடி­வ­தில்லை என்­பது போன்று பெங்­க­ளூரு நோக்­கிய கோதண்­ட­ரா­மரின் பயணம் நீண்ட நெடி­ய­தாக இருந்­தது. பெங்­க­ளுரு ஈஜி­புரா பகு­தியில் கோதண்ட ராம­சாமி கோயில் உள்­ளது. திருப்­பதி தேவஸ்­தா­னத்தைச் சேர்ந்த அதி­கா­ரிகள் ஒரு­முறை இந்தக் கோயி­லுக்கு வந்து கோதண்­ட­ரா­மரை வழி­பட்­டனர்.

அப்­போது, கோயிலின் முகப்பில் பிர­மாண்­ட­மான விஷ்ணு சிலை அமைக்­கப்­பட்டால், நன்­றாக இருக்கும் என்று ஆலோ­சித்­தனர். இதை­ய­டுத்து, கோதண்­ட­ரா­ம­ருக்கு சிலை அமைக்கக் கல் தேடும் பணி தொடங்­கி­யது. இந்­தியா முழு­வதும் பல இடங்­களில் தேடியும் கிடைக்­க­வில்லை.

கடை­சியில் இந்தப் பிர­மாண்ட விஷ்ணு சிலை அமைக்கும் பணிக்கு கோயில்கள் நிறைந்த தமி­ழ­கத்தில் இருந்­துதான் கல் கிடைத்­தது. திரு­வண்­ணா­மலை மாவட்டம் வந்­த­வாசி அரு­கே­யுள்ள கொரக்­கோட்டை கிரா­மத்தில் கிடைத்த அந்தக் கல்லில் இருந்து பிர­மாண்ட சிலை அமைக்கும் பணி 2014-ம் ஆண்டு தொடங்­கி­யது.

ராஜேந்­திர ஆச்­சாரி என்­பவர் தலை­மையில் 20 சிற்பக் கலை­ஞர்கள் இணைந்து விஷ்ணு சிலையை ஆண்­டுக்­க­ணக்கில் வடி­வ­மைத்­தனர். சிலை 64 அடி உயரம் கொண்­டது. பீடம் 24 அடியில் அமை­கி­றது. 25 அடி அகலம் கொண்ட இந்தச் சிலையின் எடை 380 டன்.

இவ்­வ­ளவு எடை கொண்ட சிலையைத் திரு­வண்­ணா­ம­லை­யி­லி­ருந்து பெங்­க­ளூரு கொண்டு செல்லும் பணி பெரும் சவால் நிறைந்­த­தாக இருந்­தது. 240 டயர்கள் கொண்ட பிர­மாண்ட டிரெக்கில் கடந்த நவம்பர் மாதம் 10-ம் தேதி திரு­வண்­ணா­ம­லையில் இருந்து கோதண்­ட­ராமர் சிலை பெங்­க­ளூரு நோக்கி பய­ணத்தைத் தொடங்­கி­யது.

வழியில் பல தடை­களைச் சந்­திக்க நேரிட்­டது. சில இடங்­களில் கடைகள், வீடுகள் இடிக்­கப்­பட்­டன. அவர்­க­ளுக்கு நஷ்ட ஈடும் கோயில் நிர்­வாகம் சார்பில் அளிக்­கப்­பட்­டது. சிலையின் எடை கார­ண­மாக லொறியின் டயர்கள் அவ்­வப்­போது வெடித்­து­வி­டு­வது உண்டு. டயர்கள் மாற்­றப்­பட்டு மீண்டும் கோதண்­ட­ராமர் பய­ணப்­ப­டுவார்.

சில இடங்­களில் தனி­யாக சாலை அமைக்­கப்­பட்டு, பய­ணத்தைத் தொடர வேண்­டி­யும் இருந்­தது. நாள் ஒன்­றுக்கு 1 அல்­லது 2 கிலோ மீட்டர் தொலை­வுதான் லொறி செல்லும்.  இப்­ப­டி­யாக 7 மாதங்கள் பய­ணப்­பட்டு கடை­சி­யாக செவ்­வாய்க்­கி­ழ­மை­யன்று பெங்­க­ளூரு சென்று சேர்ந்த கோதண்­ட­ராமர் சிலையை பக்­தர்கள் வழி­பட்டுப் பர­வ­சப்­பட்­டனர்.

கோதண்­ட­ராமர் சிலை பய­ணத்­துக்குப் பயன்­ப­டுத்­தப்­பட்ட லொறிக்கு டீசல் மட்டும் 12,000 லிட்டர் தேவைப்­பட்­டது. லொறி வாடகை சுமார் ரூ.2 கோடி. டீசல் செலவு ரூ.7.5 லட்சம். இது தவிர இரு மாநில காவல்­ து­றை­யினர் பாது­காப்பு அளித்­தனர். கோதண்­ட­ராமர் சிலை நின்ற இடங்­களில் எல்லாம் மக்கள் வழி­பட்டு மகிழ்ந்­தனர். தற்­போது, ஈஜி­புரா பகு­தியில் லொறி நிறுத்­தப்­பட்­டுள்­ளது.

லொறி­யி­லி­ருந்து சிலை இறக்கப்பட்டதும், இறுதிக்கட்டப் பணிகள் நடைபெறும். இதற்கு இன்னும் 2 ஆண்டுகள் ஆகும் என்று சொல்லப்படுகிறது. பிறகு, கோயிலின் முகப்பில் 24 அடி உயரப் பீடத்தில் கோதண்டராமர் சிலை நிறுவப்படும்.

(நன்றி: விகடன்)

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!