வரலாற்றில் இன்று ஜூன் 03: 1984 சீக்­கிய பொற்­கோ­யிலில் இந்­திய இரா­ணுவம் தாக்­குதல்

0 103

1326: ரஷ்­யா­வுக்கும் நோர்­வேக்கும் இடை­யி­லான எல்லை தொடர்­பான நோவ்­கோரட் உடன்­ப­டிக்கை கையெ­ழுத்­தி­டப்­பட்­டது.

1539: அமெ­ரிக்­காவின் புளோ­ரிடா மாநிலம் ஸ்பெய்­னுக்கு உரி­யது என ஸ்பானிய கட­லோ­டி­யான ஹேர்­னடோ டி சோட்டோ உரிமை கோரினார்.

1839: சீனாவில் பிரித்­தா­னிய வர்த்­த­கர்­க­ளிட மிருந்து 12 லட்சம் கிலோ­கிராம் ஓபியம் போதைப்­பொ­ருளை சீன அதி­கா­ரிகள் கைப்­பற்­றினர்.

இதைத் தொடர்ந்து இரு­நா­டு­க­ளுக்கும் இடையில் “முத­லா­வது ஓபியம் யுத்தம்” நடை­பெற்­றது.

1885: கனே­டிய மண்ணில் கடைசி இரா­ணுவ சமர் நடை­பெற்­றது.

பழங்­குடி இனத் தலை­வ­ரான மிஸ்­டாகி மஸ்க்வா பொலி­ஸா­ரி­ட­மி­ருந்து தப்­பிச்­சென்றார்.

1889: கன­டாவின் கிழக்கு மேற்கு பிராந்­தி­யங்­களை இணைக்கும் கனே­டிய பசுபிக் ரயில்­பாதை நிர்­மாணம் பூர்த்தி ய­டைந்­தது.

1916: அமெ­ரிக்க தேசிய பாது­காப்புப் படை­யி­னரின் எண்­ணிக்கை 450,000 ஆக அதி­க­ரிக்­கப்­பட்­டது.

1935: கன­டாவில் வேலை­யற்ற ஒரு லட்சம் பேர் வன்­கூவர் நக­ரி­லி­ருந்து ஒட்­டோவா நகரை நோக்­கிய வாகனப் பேர­ணியை ஆரம்­பித்­தனர்.

1937: பிரித்­தா­னிய மன்னர் 8 ஆம் எட்வர்ட் வல்லிஸ் சிம்ஸன் எனும் பெண்ணை திரு­மணம் செய்தார். இத்­தி­ரு­மணம் கார­ண­மாக மன்னர் பத­வியை 8 ஆம் எட்வர்ட் துறக்க நேரிட்­டது.

1941: ஜேர்மன் படைகள், கிறீஸின் கென்­டனோஸ் கிரா­மத்தை அழித்து அங்­கி­ருந்த 180 பேரையும் கொலை செய்­தன.

1950: நேபா­ளத்­தி­லுள்ள 8091 மீற்றர் உய­ர­மான மலைச்­சி­க­ர­மான அன்­னபூர்ணாவின் உச்­சியை பிரான்ஸை சேர்ந்த மொரிஸ் ஹேர்ஸோக், லூயிஸ் லாச்னெல் ஆகியோர் அடைந்து சாதனை படைத்­தனர். 8000 மீற்றர் உய­ர­மான மலைச்­சி­க­ர­மொன்றை மனி­தர்கள் அடைந்­தமை அதுவே முதல் தட­வை­யாகும்.

1969: தென் வியட்நாம் கரை­யோ­ரத்தில் நடை­பெற்ற கூட்டுப் பயிற்­சி­யொன்­றின்­போது, அவுஸ்­தி­ரே­லிய விமா­னம்­தாங்கி கப்­ப­லான எச்எம்.ஏ.எஸ். மெல்­பேர்­னுடன் தற்­செ­ய­லாக மோதி­யதால் அமெ­ரிக்க நாச­காரி கப்­ப­லான யூ.எஸ்.எஸ். பிராங் ஈ இவான்ஸ் இரண்­டாக உடைந்­தது. அக்­கப்­ப­லி­லி­ருந்த 74 பேர் உயி­ரி­ழந்­தனர்.

1979: மெக்­ஸிகோ வளை­கு­டாவில் எண்ணெய் கிணறு ஒன்றில் கசிவு ஏற்­பட்­டதால் சுமார் 30 லட்சம் பீப்பாய் எண்ணெய் கடலில் கசிந்­தது.

1982: லண்­டனில் இஸ்­ரே­லிய தூதுவர் ஷ்லோமோ ஆர்கோவ் மீது துப்­பாக்கிப் பிர­யோகம் மேற்­கொள்­ளப்­பட்­டது. இதனால் அவர் பக்­க­வா­தத்­திற்­குள்­ளானார்.

1984: இந்­தி­யாவின் அமிர்­தசரஸ் நகரில் சீக்­கி­யர்­களின் பொற்­கோயில் மீது “ஒப­ரேஷன் புளு ஸ்டார்” எனும் இரா­ணுவ நட­வ­டிக்கை ஆரம்­ப­மா­னது.

1989: 7 வார கால­மாக மாண­வர்கள் ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­டி­ருந்த திய­னமென் சதுக்­கத்தை கைப்­பற்­று­வ­தற்­காக சீன அர­சாங்கம் இரா­ணு­வத்­தி­னரை அனுப்­பி­யது.

1991: ஜப்­பானின் உன்ஸென் எரி­மலை வெடித்ததால் 43 பேர் உயி­ரி­ழந்­தனர். இவர்கள் அனை­வரும் ஆராய்ச்­சி­யா­ளர்­களும் ஊட­க­வி­ய­லா­ளர்­களும் ஆவர்.

1998: ஜேர்­ம­னியில் இடம்­பெற்ற ரயில்­வி­பத்தில் 101 பேர் உயி­ரி­ழந்­தனர்.

2006: சேர்­பியா – மொன்­டே­னெக்ரோ கூட்­ட­மைப்­பி­லி­ருந்து மொன்­டே­னெக்ரோ பிரிந்­தது.

2012: நைஜீரியாவில் ஏற்பட்ட விமான விபத்தில் 163 பேர் உயிரிழந்தனர்.

2013: சீனாவில் கோழிப்பண்ணையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 120 பேர் உயிரிழந்தனர்.

2017: லண்டனில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல்களில் 8 பேர் கொல்லப்பட்டதுடன், 48 பேர் காயமடைந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!