நீதியே! நீ கேள்!! (தொடர்கதை) அத்தியாயம் – 02

0 55

கலாபூஷணம்” பேராதனை ஏ. ஏ. ஜுனைதீன்

“ஐ ஏம் வெரி சொரி போ மை லேட் கமிங். ஐ ஏம் எப்­பி­யரிங் போ த கில்டி.” என­ற­வாறே உள்ளே நுழைந்து, வக்­கீல்­க­ளுக்­கு­ரிய மேசையில் தனது பைல்­களை வைத்தார் புகழ் பெற்ற ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி ரகு. இவர் சுரேஷின் அண்ணன்.
அப்­போது…

(இனி அதி­லி­ருந்து)

நாட்டில் புகழ் பெற்ற ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி ரகு, அவர் தான் என்­பதை அறி­யாது குற்­ற­வாளிக் கூண்டில் நிற்கும் ராமன், தனக்­காக வாதாட ஒரு ” லோயர் ” எழுந்து நிற்­பதைக் கண்டு ஆச்­ச­ரியம் அடைந்தான்.

ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி ரகுவை ஏற்­க­னவே அறிந்­துள்ள வழக்­காளிக் கூண்டில் நிற்கும் கோபாலின் கண்­களும் அவ­ருக்­காக வாதாடும் சட்­டத்­த­ரணி சுரேஷின் கண்­களும் குற்­ற­வாளிக் கூண்டில் நிற்கும் ராம­னுக்­காக ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி ரகு, வாதாட வந்­தி­ருப்­பதைக் கண்டு அதி­ச­யித்­தன.

கொழும்பில் இருந்து கண்டி நீதிமன்­றத்­துக்கு பார­தூர­மான வழக்­கு­க­ளுக்கும் பணம் படைத்­த­வர்­க­ளுக்­கா­கவும் தனது அண்ணன் ரகு, அடிக்­கடி இங்கு வரு­வது வழக்கம் என்­பதால், ரகுவை நீதிமன்­றத்­தினுள் கண்­டதில் சுரே­ஷுக்கு ஆச்­ச­ரியம் எது­வு­மில்லை என்­றாலும் தானும் அண்­ணனும் எதிரும் புதி­ரு­மாக இன்று தான் முதல் முறை­யாக ஒரு வழக்கில் வாதாடப் போகின்றோம் என்ற சஞ­ச­லமும் சுரேஷின் மனதில் புளியைக் கரைத்­தது.

ஒரு தவ­ணைக்கு பல லட்சம் வாங்கும் அண்ணன் ரகு, பலாக்காய் திருட்டு வழக்கில் பரம ஏழைக்­காக வாத­வட எப்­படி வந்தார் ! என சுரேஷ் மலைத்து நின்றார்.  சுரேஷின் மலைப்­புக்கு மத்­தியில் வழக்கு ஆரம்­ப­மா­னது.

” ஒரு ஏழை ஒரு பலாக்­காயைத் திரு­டி­யது பசிக்­காக சாப்­பி­டு­வ­தற்­கா­கத்தான் என­்பதை இந்த உல­கி­லுள்ள யாரா­லுமே மறுக்க முடி­யாது. மழைக்­காலம். கூலி வேலையும் இல்லை. இருப்­பதும் கூலி வீடு. மூன்று குழந்­தை­களும் மனை­வியும் ரெண்டு நாட்­களாக் கொடிய பட்­டி­னியில்.

சுரே : யுவர் ஹொனர் !… இந்த வழக்கு ஒரு பலாக்­காயைத் திரு­டி­யது சம்­பந்­த­மா­னது. ஆனால், வறு­மையின் கார­ண­மாக சாப்­பாட்­டுக்­காக ஒரு பலாக்­காயைத் திரு­டி­ய­தாகச் சொல்லும் எதிரிக் கூண்டில் நிற்­பவர், இந்த நாட்டில் ஒரு வழக்­குக்கு பெருந்­தொகை வாங்கும் ஒரு ஜனா­தி­பதி சட்­டத்­த­ர­ணி­யான நாமெல்லாம் மதிக்கும் திரு, ரகு அவர்­களை தனக்­காக வாதிட நிய­மித்­தி­ருப்­பது எனக்கு ஆச்­சர்­ய­மா­கவும் விசித்­தி­ர­மா­கவும் உள்­ளது. ” என நிறுத்­தி­யதும் ரகு எழுந்தார்.

ரகு : ஆமாம் யுவர் ஹொனர் ! அவர்­களே ! சுரேஷ் சொல்­வது முற்­றிலும் உண்மை தான். என்­னோடு வாதிட வந்­தி­ருக்கும் சுரேஷ் அவர்­களைப் போல் என்னைப் பற்றி தெரிந்­த­வர்கள் யாரும் இங்கு இருக்க முடி­யாது. அது ஏன் என்றால் அவர் என் உடன் பிறந்த தம்பி.்,
” அது போக, எனது கட­்சிக்­காரர் ஒரு பலாக்­காயைத் திரு­டி­ய­தாக குற்றம் சாட்டப் பட்­ட­வ­ராவார்.
” ஒரு ஏழை ஒரு பலாக்­காயைத் திரு­டி­யது பசிக்­காக சாப்­பி­டு­வ­தற்­கா­கத்தான் என­பதை இந்த உல­கி­லுள்ள யாரா­லுமே மறுக்க முடி­யாது. மழைக்­காலம். கூலி வேலையும் இல்லை. இருப்­பதும் கூலி வீடு. மூன்று குழந்­தை­களும் மனை­வியும் ரெண்டு நாட்­களாக கொடிய பட்­டி­னியில்.

” பக்­கத்து தோட்­டத்தில் பல பலா மரங்கள். அந்த மரங்­களின் உரி­மை­யாளர் தினம் பத்­துக்­காய்கள் சாப்­பிட்­டாலும் தினமும் நுற்றுக் கணக்­கான காய்கள் அந்த தோட்­டத்து மரங்­களில் மிஞ்சும்.

” அதற்கு ஆதா­ர­மாக அந்த பலா மர­ங்­க­ளுக்கு அடியில் யாருக்­குமே பயன் படாமல் பழுத்து விழுந்து, அழுகி, காய்­ந்து போன நுற்­றுக்­க­ணக்­கான காய்­களின் எச்­சங்கள்.

இடையில் குறுக்­கிட்ட சுரேஷ் ” அதுக்­காக இன்­னொ­ருவர் தோட்­டத்­தினுள் நுழைந்து திருட முடி­யாது யுவர் ஹொனர் ! ” என்றார்.
சுரேஷைப் பார்த்து புன்­ன­கை­யுடன் ” அது உண்மை யுவர்­ஹொனர் ” என்றார் ரகு.

” அப்­ப­டி­யானால் எதிர்த்­த­ரப்பு வாதத்­தி­லி­ருந்து வந்த அந்த பதிலின் மூலமே எதிரிக் கூண்டில் நிற்­பவர் குற்­ற­வா­ளி­யென நிரூ­ப­ண­மா­கி­றது யுவர் ஹொனர் ! ” என்றார், மகிழ்ச்­சி­யுடன் சுரேஷ்.

” நான் இன்னும் வாதிட்டு முடி­ய­வில்லை யுவர் ஹொனர். என்­னுயை கட்­சிக்­காரர் ராமன் ஒரு ஏழை. மழைக்­காலம். கூலி வேலையும் இல்லை. தாயும் தகப்­பனும் தண்­ணீரைக் குடித்­தா­வது பசியை ஓர­ளவு அடக்கிக் கொள்­ளலாம்.

மூன்று பிள்­ளை­களின் ரெண்டு நாள் கொடிய பசியை எப்­படி பெற்­ற­வர்­களால் பொறுத்துக் கொள்ள முடியும் யுவர் ஹொனர்.

” பக்­கத்து தோட்­டத்தில் நின்ற ஏழை­களின் பசி­யாற்றும் மர­மான பலா மரத்தில் கொத்து கொத்­தாகக் காய்கள் தொங்­கின. அந்த மரம், ஊரில் மிகப் பிர­ப­ல­மான சமூக சேவை­யாளர் கோபால் அவர்­க­ளு­டை­யது.

பசிக்கு ஒரு காய் பிடுங்­கினால் எதுவும் சொல்ல மாட்டார் என்ற விசுவாசத்தின் பேரிலேயே ஒரேயொரு பலாக்காயை பிடுங்கி வந்து, அதனை அவித்து சாப்பிட்டுக் கொண்டிருந்த போது, தமிழ் படத்தில் வில்லன்கள் வருவது போல் வந்த பொலிஸார், அவித்த பலாக் காயையும் ராமனையும் அள்ளிக் கட்டிக் கொண்டு சென்றனர்.  சட் என்று ரகுவை, இடை மறித்தார் சுரேஷ்.

                                                                                                                                                                                                                       ( தொடரும் )

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!